இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்!! பண மழை பொழியப் போகுது!!

First Published | Jun 28, 2023, 12:16 PM IST

சூரியன் புதன் ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்கள் கிடைக்கவுள்ளது. 

தற்போது சூரியன் மிதுன ராசியில் பயணிக்கிறார். புதன் ஓராண்டுக்கு பின் ஜூன் 24 ஆம் தேதியில் தான் மிதுன ராசிக்குள் நுழைந்தார். இதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவானது. இந்த தாக்கத்தின் விளைவாக 4 ராசிக்காரர்களின் செல்வம் செழித்தோங்கும்.  

மேஷம் 

மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பல நன்மைகளை பெறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். இழுபறியாக இருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் வாங்கி இருந்தலும் தொழிலதிபர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் விருத்தி அடையும். வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவார்கள். பண ஆதாயம் உண்டு. 


கடகம் 

கடக ராசியினருக்கு விபரீத ராஜயோகம் அமோகமான பலன்களை கொடுக்கும். தேவையற்ற செலவு செய்பவர்கள் இனிமேல் அதை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். திடீர் பணவரவு மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்யும். வருமானம் உயரும். புதிய நட்பு கிடைக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் இந்த காலத்தில் சிறந்து விளங்குவார்கள்; தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

விருச்சிகம் 

விருச்சிக ராசியினருக்கு மங்களகரமான பலன்கள் கிடைக்கும். கேதுவின் 9 ஆவது பார்வை விழுவதால், உடல் கடுமையான வலியை உணரும். பண வரவு செழிப்பாக இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வருமானம் பெருகும். பழைய முதலீடுகள் லாபம் பெற்று தரும். 

மகரம் 

இந்த ராசிக்காரர்களுக்கு நீதிமன்ற வழக்குகள் இருந்தால் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உங்களுக்கு இப்போது தைரியம் அதிகமாகும். கடனை அடைப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளை தோற்கடிப்பீர்கள். 

Latest Videos

click me!