திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது அரங்கநாத சுவாமி திருக்கோயில். 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இந்த கோயில் ஆசியாவின் மிகப்பெரிய பெருமாள் கோயிலாக உள்ளது. இந்த கோயிலில் 21 கோபுரங்கள் உள்ளது.
கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றம் இரண்டாம் நிலை சுவர்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 1.50 மணியளவில் கிழக்கு வாசல் நுழைவு வாயிலில் கோபுரத்தின் முதல் சுவர் மளமளவென இடிந்து விழுந்தது. இதில், இருந்த சிற்பங்கள் சிதிலமடைந்தது. நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.