குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்தியும் ஒன்றா? இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

Published : Jul 28, 2023, 10:44 AM ISTUpdated : Jul 28, 2023, 01:18 PM IST

நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இருவரும் ஒன்று கிடையாது. தட்சிணாமூர்த்தி என்பவர் சிவ வடிவம், குரு பகவான் என்பவர் நவகிரக வடிவம். இது தெரியாமல் பலரும் இருவரும் ஒருவர் என்று பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

PREV
13
குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்தியும் ஒன்றா? இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்காக அல்லது பரிகாரம் செய்வதற்கு என நினைத்து வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி முன் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் உண்மையான குரு முன் வழிபடச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக குரு பகவானுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தட்சிணாமூர்த்தி முன் செய்து வருகின்றனர்.

23

​தட்சிணாமூர்த்தி என்பவர் யார்?

தட்சிணாமூர்த்தி என்பவர் சிவ பெருமானின் ரூபம்.  தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர் சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை. அதனால் அவர் வெண்ணிற ஆடையில் அருள்பாலிப்பார். 

ஸ்நகாதி முனிவர்களுக்கு வேத ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார். ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தி முன் நாம் தியானத்தில் அமர்ந்து வழிபடலாம். 

33
dakshinamoorthy

குரு என்பவர் யார்?

 குரு பகவான் என்பவர் 9 நவகிரகங்களில்  வடக்கு திசை நோக்கி அருள்பாலிப்பவர். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதே போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை. இவருக்கு மஞ்சள் வஸ்திரத்தைச் சாற்றுவதும். கொண்டைக்கடலை மாலை அணிவிப்பதும் உகந்தது.

ஆனால் குரு என்பவர் இந்திர லோகத்தில் தேவர்களுக்கெல்லாம் குருவாக ஆலோசனை வழங்கக் கூடியவராக அதாவது ஆசிரியர் பணியை செய்யக் கூடியவர். இவரை வியாழக்கிழமைகளில் நவக்கிரக சன்னதியில் வழிபாடு செய்யலாம். இப்போதாவது ஞானத்தை வழங்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்தி வேறு. நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு வேறு என்பதை உணர்ந்து வழிபடுங்கள்.

click me!

Recommended Stories