விரைவில் திருமணம் நடக்க தப்பி தவறி கூட இந்த திசையில் தூங்காதீங்க..! மீறினால் விபரீதமாகும்!

First Published | Oct 21, 2023, 11:00 AM IST

உங்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்றால், நீங்கள் தூங்கும் திசையில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், வாஸ்துபடி, இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில  விஷயங்களை இன்றே செய்யுங்கள்..

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சரியான வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், பல முயற்சிகளுக்குப் பிறகும்  திருமணம் கைக்கூடவில்லை என்றால், மன அழுத்தம் ஏற்பட தொடங்குகிறது. அந்தவகையில், இங்கு இன்னும் திருமணமாகாதவர்களுக்கு உதவும் சில ஜோதிட மற்றும் வாஸ்துபடி சில சிறப்பான தீர்வுகள் உள்ளன. உங்கள் திருமண வாழ்க்கையில் எந்த மாதிரியான தடைகள் வந்தாலும், இந்த தீர்வுகள் மூலம் தீர்வு காணலாம். 

நாம் செய்யும் அனைத்தும், நாம் விழித்தாலும், தூங்கினாலும், எழுந்தாலும், சாப்பிட்டாலும், குடித்தாலும், நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வாஸ்து படி சரியான திசையில் தூங்கவில்லை என்றால் அது திருமணத்தில் தடைகளை உண்டாக்கும். அது குறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்...

Tap to resize

திருமண தடை நீக்குவதற்கான வாஸ்து குறிப்புகள்:

வீட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் தூங்கக் கூடாது. வீட்டின் இந்த மூலையில் தூங்குவோர் தங்கள் திருமணத்தில் தடைகளை எதிர்கொள்கிறார்கள் மற்றும் விரும்பிய உறவுகளைப் பெற மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே, தப்பித்தவறி கூட இந்த திசையில் தூங்காதீர்கள்.

இதையும் படிங்க:  உள்ளங்கையில் இந்த வரிகள் இருந்தால் திருமண முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகம்!

விரைவில் திருமணம் செய்துகொள்ளும் கனவில் இருக்கும் ஆண்கள் கருப்பு நிற ஆடைகள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். இதனால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும்.

இதையும் படிங்க:  இப்படிப்பட்டவர்களை திருமணம் செய்யவதற்கு செய்யாமல் இருப்பது நல்லது..!!

அதுபோல் நீங்கள் உறங்கும் போது உங்கள் தலை தெற்கு நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் இருக்க வேண்டும். ஏனெனில் இவை மேலும் மேலும் உங்களுக்கு திருமண தடையை தான் ஏற்படுத்தும். எனவே, தூங்கும்போது கவனமாக இருங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதுபோல், ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் உள்ள அறையில் தூங்குவது நல்ல உறவுமுறையை ஏற்படுத்துகிறது; மேலும் நீங்கள் தூங்கும் அறைக்குள் சூரிய ஒளி மற்றும் காற்று நுழைவதை அலட்சியம் செய்யக்கூடாது. கொஞ்சம் கவனமாக இருக்கவும். இது திருமணத்தில் தடையை உண்டாக்கும்.

திருமணத்தில் தடை நீங்க அழுக்குகள் நிறைந்த இடத்தில் தூங்குவதை தவிர்க்கவும். எனவே, தூங்கும் இடத்தை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  

நீங்கள் உங்கள் அறையை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால், நீங்கள் தூங்கும் இடம் கதவுக்கு அருகில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

Latest Videos

click me!