ஆண்டியும் அரசனாகும் சனி யோகம்.. இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. பண மழை கொட்டப் போகுது!!

First Published | Apr 29, 2023, 12:18 PM IST

Shash Mahapurush Yoga Benefits: சனி பகவான் கும்பத்தில் நுழைவதால் ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகும். இதனால் 5 ராசியினர் யோகம் அடைகின்றனர்.

சனி அருள்புரிந்தால் பிச்சைக்காரனும், அரசனாகும் யோகம் கிடைக்கும். ஒருவரின் அந்தஸ்தை அரசனாக மாற்றும் ஆற்றல் சனி யோகத்திற்கு உண்டு. தற்போது சில ராசிகளுக்கு சனி அப்படி ஒரு யோகத்தை உருவாக்கியுள்ளார். அதுவே ஷஷ மஹாபுருஷ யோகம் (Shash Mahapurush Yoga) என்கிறார்கள் ஜோதிடர்கள். 

சனி பகவான் மகர, கும்பம் அல்லது துலாம் ஆகிய இடங்களில் கேந்திரம் அமைந்து லக்னம் வலுப்பெற்றால் ஷஷ யோகம் உண்டாகும். இது ஒருவகை ராஜயோகம் எனலாம். ஜனவரி 17ஆம் தேதி சனி கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனி அடுத்த இரண்டரை வருடங்கள் கும்ப ராசியில் இருப்பார். சனி கும்ப ராசியில் இருப்பதால் ஷஷ மகாயோகம் உருவாகும். இதனால் பயன்பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

Tap to resize

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சனியின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையின் சில பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடுவீர்கள். இந்த யோகத்தால் உங்களுக்கு திடீர் பணம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.

மிதுனம்

இந்த யோகத்தின் காரணமாக மிதுன ராசியினரின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைக் காணலாம். நீங்கள் பல சமூக செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்பீர்கள். இதன் மூலம் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் புனித யாத்திரையும் செல்லலாம். பதவி உயர்வு தொடர்பான பல சிறந்த வாய்ப்புகளைப் பெறப் போகிறீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பதட்டங்களும் நீங்கும்.

சிம்மம்

இந்த யோகத்தின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் கொஞ்சம் இருந்தாலும், நல்ல பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்கள் பங்கு கொள்ளும் எந்த தேர்விலும் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஷஷ யோகம் உங்களுக்கு பணியிடத்தில் பெரும் வெற்றியைத் தரும். இந்த நேரத்தில், நீங்கள் நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான வேலைகளில் நல்ல லாபம் பெறுவீர்கள். எந்த வணிகமாக இருந்தாலும் இந்த காலகட்டத்தில் பெரிய ஆர்டர்களைப் பெறலாம். 

கும்பம் 

உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்குள் சாதகமான மாற்றங்களை அனுபவிப்பீர்கள். இந்த யோகத்தின் பலனாக உங்கள் பொருளாதார வாழ்க்கையும் மேம்படும். நீங்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். அதில் உங்களுக்கு நன்மையே இருக்கும். ஒழுக்கம், கடின உழைப்பால், நீங்கள் உங்களுடைய துறையில் முன்னேறி பதவி உயர்வு, சம்பளத்தில் வெற்றி பெறுவீர்கள். நல்ல பலனை அடைவீர்கள்.  

துலாம்

துலாம் ராசியின் தொழில் துறையில் இந்த யோகத்தின் பலன் தெரியும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் இந்த யோகத்தால் உயர் பதவிகளை அடையலாம். இந்த நேரம் உங்களுக்கு பொருளாதார நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என விரும்பும் மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Latest Videos

click me!