Shani Amavasai 2023 : இன்று சனி அமாவாசை...இந்த 5 ராசிக்கு சனியின் அருள் கிடைப்பது நிச்சயம்..!

First Published | Oct 14, 2023, 2:25 PM IST

இன்று சனி அமாவாசை. பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளான இன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் கூட. இன்று சில ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் பொழியும்.

இன்று சனி அமாவாசை. சனி அமாவாசை இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சனிதேவரின் வழிபாடு, விரதம், சடங்குகள் செய்யப்படுகின்றன. சனிபகவானின் அருள் பெற இந்த நாள் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை தேதி சர்வ பித்ரு அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திதியில் ஷ்ராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் திருப்தி அடைகிறார்கள்.

சர்வ பித்ரு அமாவாசை அன்று சனி அமாவாசை தற்செயல் நிகழ்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் கிடைக்கும்.

Tap to resize

ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் சனிச அமாவாசை தினமான இன்று சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த நபர்கள் தங்கள் கடின உழைப்புக்கு முழு பலனைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலையும் முன்பை விட வலுவாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் வெற்றி நிச்சயம்.

இதையும் படிங்க:  சனி அமாவாசை அன்று "இந்த" பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்.. சனி தேவனின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்!

கடகம்: கடக ராசிக்காரர்கள் இன்று சனிபகவானின் அருள் பெறுவார்கள். இன்று அன்னதானம் செய்வதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  அப்பா மகனாக இருந்தும் சனியும் சூர்ய கடவுளும் ஏன் எதிரிகள்? முழு கதையும் இங்கே..!!

துலாம்: சனி அமாவாசை இந்த ராசிக்காரர்களுக்கு குறிப்பாக பலனளிக்கப் போகிறது. சனி தேவன் உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் தருவார். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க பல புதிய வாய்ப்புகள் அமையும். புதிதாக தொடங்கும் எந்த வேலையிலும் வெற்றி பெறுவீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விருச்சிகம்: சனி அமாவாசை அன்று விருச்சிக ராசிக்கு சனியின் சிறப்பு அருள் பொழியும். இன்று சனிபகவானை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் துணையுடன் உங்கள் உறவு வலுவடையும்.

மகரம்: மகர ராசிக்காரர்களும் இன்று சனிபகவானின் அருள் பெறுவார்கள். இந்த சனி அமாவாசை, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் கெட்ட காரியங்கள் அனைத்தும் முடிவடையும் மற்றும் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். இன்று நடக்கும் சுப காரியங்களால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

Latest Videos

click me!