இந்த ஜோதிட பரிகாரங்களை இன்று மாலைக்குள் செய்யுங்கள்.. சனி பகவானின் அருள் கிடைப்பது உறுதி!

Published : Feb 03, 2024, 10:14 AM ISTUpdated : Feb 03, 2024, 10:35 AM IST

இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, நீதியின் தெய்வமான  சனி பகவானுக்கு  சனிக்கிழமையானது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  

PREV
16
இந்த ஜோதிட பரிகாரங்களை இன்று மாலைக்குள் செய்யுங்கள்.. சனி பகவானின் அருள் கிடைப்பது உறுதி!

நீதியின் கடவுள் ஆன சனி பகவானுக்கு சனிக்கிழமை உகந்த நாள். சனிக்கிழமை அன்று சனி பகவானின் மட்டுமல்லாமல் அனுமானையும் வழிபடலாம். இது அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்று கூட சொல்லலாம். இந்து மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் சனி பகவான் மற்றும் அனுமானை வணங்குவதன் மூலம், ஒரு நபர் பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைகிறார்.

26

அதுபோல், ஒரு நபரின் ஜாதகத்தில் சனியின் சடேசாதி அல்லது தையாவால் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபட வேண்டும். இதுதவிர, சில ஜோதிட பரிகாரங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜாதகத்தில் சனியின் அசுப பலன்கள் குறைந்து வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் வரும் என்பது நம்பிக்கை.
 

36

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜாதகத்தில் சனியின் பாதிப்பு இருந்தால், இன்று (சனிக்கிழமை) மாலை, அரச மரத்தின் அருகே தீபம் ஏற்றி, மரத்தை சுற்றி வரவும். இதைச் செய்வதன் மூலம், சனி தேவன் மகிழ்ச்சியடைந்து, உங்களது அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவார்.

46

அதுபோல், இன்று (சனிக்கிழமை) மாலை வழிபாட்டின் போது அனுமன் சாலிசா மற்றும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும். இதன் மூலம் பயம், நோய் மற்றும் பல வகையான கவலைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

இதையும் படிங்க:  சனிக்கிழமையில் பிறந்த நபரா..? உங்களின் தொழில், காதல் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.. செக் பண்ணுங்க!

56

மேலும், ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசாவை மாலையில் பாராயணம் செய்ய வேண்டும். அனுமான் சாலிசாவை பாராயணம் செய்வதன் மூலம், அனுமான் மட்டுமல்ல, சனி பகவானும் மகிழ்ச்சி அடைவார்.

இதையும் படிங்க:  இன்று சனிக்கிழமை.. துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க இவற்றை செய்யுங்கள்..!

66

இன்று சனிக்கிழமை என்பதால், இந்நாளில், தர்மத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எனவே, நீங்கள் குளித்த பிறகு எள், கடுகு எண்ணெய், உணவு அல்லது பணத்தை மதியம் அல்லது மாலைக்குள் ஒரு ஏழைக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி தேவன் மகிழ்ச்சியடைந்து, உங்களின்
அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!

Recommended Stories