சாஸ்திரங்களின்படி, கோள்களின் இயக்கம் அவ்வப்போது ராஜயோகங்களை உருவாக்குகின்றன. வியாழன் தன் ராசியில் மீனத்தில் இருக்கிறார். சனி, கும்ப ராசியில் சூரியனுடன் இருக்கிறார். வியாழனுடன் சேர்ந்து மீனத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். இதன் காரணமாக 617 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களின் அரிய இணைவு ஏற்பட்டுள்ளது.
ஷஷா யோகம், மாளவ்ய யோகம், ஹம்சராஜ யோகங்களும் இந்த கிரகங்களின் இணைப்பால் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் வெளிப்படும். இதனால் நான்கு ராசியினருக்கு யோகம் வருகிறது. அதை இங்கு காணலாம்.
கும்பம் ராசி அன்பர்களே..
ஷஷா யோகம் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்களுடைய ஜாதகத்தில் சனிபகவான் லக்ன வீட்டில் அமர்ந்திருப்பதால், இனி உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். தன்நம்பிக்கையும் அதிகரிக்கும். இல்லற வாழ்வில் துணையுடன் உறவில் இனிமை இருக்கும். வாழ்க்கைத் துணையினால் செய்யப்படும் முதலீடு லாபம் அடையும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்கால திட்டத்தில் வேலை செய்யலாம். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். வாழ்க்கை மாற போகுது!
தனுசு ராசி அன்பர்களே..
சுக்கிரனின் தாக்கத்தால் உங்களுடைய ஜாதகத்தில் நான்காம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் உடல்ரீதியான மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படலாம். மூதாதையர் சொத்துக்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. நிதி விஷயங்களில் ஏறுமுகம் காண்பீர்கள். அதே நேரம் தாயாருடன் உறவும் நன்றாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்.
மிதுனம் ராசி அன்பர்களே..
வியாழனில் சுக்கிரன் தாக்கத்தால், உங்கள் ஜாதகத்தில் ஹம்சா, மாளவ்ய ஆகிய இரண்டு ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனுடன், உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மேன்மையுடன் உள்ளது, அதனுடன் வியாழன் உள்ளது. இந்த நேரத்தில் வேலையில் முன்னேற்றம் வரும். வியாபாரத்தில் வெற்றி காணலாம். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்கால திட்டத்திலும் வேலை செய்யலாம். தொழில்முனைவோர் நல்ல லாபத்தை அடையலாம். ஊழியர் பதவி உயர்வு, சம்பள உயர்வு குறித்து பேசலாம்.