புரட்டாசி மாதம் 1-ம் தேதி வருகிற செப்டம்பர் 18, (வெள்ளிக்கிழமை) அன்று தொடங்குகிறது. இந்து சமயத்தில் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக வைணவ மரபில், மகாவிஷ்ணு மற்றும் பெருமாளை வழிபடுவதற்கு இந்த மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த மாதம் முழுவதும் பல பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து, பெருமாள் நாமத்தைச் சொல்லி வழிபடுகின்றனர். வீட்டில் விளக்கேற்றி, துளசி வைத்து பெருமாளை வழிபடுதல், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தல், கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தல் போன்றவை பக்தர்களால் மேற்கொள்ளப்படும் வழக்கமான வழிபாட்டு முறைகளாகும்.