Pooja lamp lighting: வீட்டில் விளக்கு ஏற்றும்போது செய்யக்கூடாத தவறுகள்..ஆன்மிக நம்பிக்கை சொல்வது என்ன?

Published : Sep 15, 2026, 02:26 PM IST

pooja lamp lighting: வீட்டில் விளக்கு ஏற்றும்போது செய்யக்கூடாத தவறுகள் என்ன? விளக்கை சுத்தமாக வைத்தல், திரி அமைக்கும் முறை, விளக்கை அணைக்கும் முறை உள்ளிட்ட பாரம்பரிய நம்பிக்கைகளை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
வீட்டில் விளக்கு ஏற்றுவது

வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றுவது வெறும் வெளிச்சத்துக்காக மட்டுமல்ல, இந்து பாரம்பரியத்தில் மங்களத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. விளக்கின் ஒளி வீட்டில் இருளை நீக்குவது மட்டுமல்லாமல், நேர்மறை ஆற்றல், தெய்வ அருள், செழிப்பு ஆகியவற்றை வரவேற்கும் குறியீடாகவும் கருதப்படுகிறது.

குறிப்பாக தினமும் விளக்கேற்றும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆனால், விளக்கு ஏற்றும்போது சில செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பெரியவர்கள் கூறி வந்துள்ளனர். அப்படி தவிர்க்க வேண்டிவை என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
வீட்டில் விளக்கு ஏற்றும்போது செய்யக்கூடாத தவறுகள்
  1. விளக்கை ஏற்றுவதற்கு முன்பு, அதில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு, கரி போன்றவற்றை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். விளக்கை ஏற்றிய பிறகு அதைத் துடைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  2. விளக்கு ஏற்றும்போது முதலில் எண்ணெய் ஊற்றிய பிறகே திரியை வைக்க வேண்டும். திரியை வைத்த பிறகு விளக்கில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்ப்பது பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.
  3. பூஜை விளக்கை வாயால் ஊதி அணைக்கக்கூடாது என்பது பாரம்பரிய நம்பிக்கை. எனவே, விளக்கை கைகளால் அல்லது பூவால் மெதுவாக அணைக்க வேண்டும்.
35
விளக்கு தானாக அணையும் அளவுக்கு விடக்கூடாது
  1. விளக்கை ஏற்றிய பிறகு அதை குளிர்விக்கும் வரை வீட்டைப் பெருக்கவோ, துடைக்கவோ கூடாது. முதலில் விளக்கு முழுமையாக குளிர்ந்த பிறகே வீட்டைச் சுத்தம் செய்வது நல்லது எனக் கூறப்படுகிறது.
  2. விளக்கை ஏற்றிய பிறகு அதில் உள்ள எண்ணெய் முழுமையாக தீர்ந்து, தீபம் தானாகவே அணையும் அளவுக்கு விட்டுவிடக்கூடாது. தீபம் தொடர்ந்து எரியும் வகையில் தேவையான அளவு எண்ணெய் இருப்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வது நல்லது.
  3. விளக்கை ஏற்றிய பிறகு அதை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பூஜை அறை அல்லது வழக்கமாக விளக்கேற்றும் குறிப்பிட்ட இடத்தில் விளக்கை வைத்து, அங்கேயே தீபம் ஏற்றுவது சிறந்ததாக நம்பப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து விளக்கேற்றுவது வீட்டில் மங்களம் மற்றும் நேர்மறை ஆற்றலை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
45
முன் வாசலை திறந்து வைக்க வேண்டும்
  1. விளக்கு ஏற்றும் நேரத்தில் வீட்டில் சண்டை, கோபம், தீய வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தை அமைதியாக பிரார்த்தனை செய்ய பயன்படுத்துவது நல்லது.
  2. விளக்கை தரையில் நேரடியாக வைப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சுத்தமான பலகை, தட்டு அல்லது பூஜை மேடையில் விளக்கை வைத்து ஏற்றுவது வழக்கம். குறிப்பாக பூஜை அறையில், விளக்கை உயரமான மற்றும் சுத்தமான இடத்தில் வைத்து ஏற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
  3. விளக்கேற்றும் நேரத்தில் முன்வாசலைத் திறந்து வைத்து, பின்வாசலை மூடி வைப்பது பாரம்பரிய வழக்கமாகக் கருதப்படுகிறது. இது வீட்டில் மங்களமும், நேர்மறை ஆற்றலும் நிலவுவதற்கான அடையாளமாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டின் வளம் வெளியேறாமல் இருக்க பின்வாசலை மூடி வைப்பதும் பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.
55
ஆன்மிக நம்பிக்கை

குறிப்பு: மேற்கண்டவை இந்து சமயத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றில் கூறப்படும் நல்லது–கெட்டது குறித்த கருத்துகளுக்கு அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை. குடும்பம், ஊர் மற்றும் வழிபாட்டு மரபுகளுக்கு ஏற்ப இந்த நடைமுறைகள் மாறுபடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories