Pillayar Arupadai Veedu List in Tamil : முருகப் பெருமானுக்கு இருப்பது போலவே விநாயகப் பெருமானுக்கும் 6 படை வீடுகள் உள்ளன. அந்த ஆறு புனிதத் தலங்கள் எவை, சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து இங்கே காணலாம். முதல் பகுதியில் 2 கோயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
விநாயகர் என்றால் மதுரையில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகரை முதலில் ஞாபகம் வருவார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் மிக சிறப்பாக இருக்கும் தமிழ் வருட பிறப்பிற்கும் மிகச் சிறப்பாக இருக்கும் பிள்ளையார்பட்டி விநாயகர் பெருமான். இந்த தொகுப்பில் விநாயகப் பெருமானின் 6 படை வீடுகள் பற்றி பார்க்கலாம். ஏற்கனவே முதல் பகுதியில் முதல் 2 படை வீடுகள் பற்றி பார்த்த நிலையில் இந்த தொகுப்பில் மற்ற 4 படை வீடுகள் பற்றி பார்க்கலாம்.
முதல் பகுதிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
மூன்றாம் படை வீடின் விநாயகர் பெயர் கள்ள வாரணப் பிள்ளையார். திருக்கடவூர் என்னும் ஊரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் உள்ளார்.இவர் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி கள்ள வாரணப் பிள்ளையார் அருள்புரிறார். இவரை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிக்கவல்லவர்.
35
4. நான்காம் படை வீடு: மதுரை:
நான்காம் படை வீட்டில் விநாயகர் பெயர் சித்தி விநாயகர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் தரிசனத்தைப் பெறலாம். உருவில் சிறியவராக இருந்தாலும், அருள் தருபவரில் சக்தி வாய்ந்தவர். கடுகு சிறுதாலும் காரம் குறையாது என்பதை போல் சிறியவராக இருந்தாலும் சக்தி மிக்கவர். இவரை வழிபட்டு அவர்களுக்கு அறிவும் செல்வமும் பொங்கி வலியும் என்று கூறப்படுகிறது.
45
5. ஐந்தாம் படை வீடு: பிள்ளையார்பட்டி
ஐந்தாம் படை வீடு விநாயகர் பெயர் கற்பக விநாயகர் இவர் பிள்ளையார்பட்டியில் அருள்பாளிக்கிறார். மிகப்பெரிய அடி உயரம் கொண்ட விநாயகர் இவர் ஒருவரே என்று கூறப்படுகிறது.இவர் கையில் இருக்கும் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பாகும். சிவலிங்கத்தை கையில் ஏந்தி, சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால், தீட்சையும் ஞானமும் கிடைக்கும். மற்ற ஐந்து படை விநாயகரிடம் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த ஐந்தாம் படை விநாயகரிடம் உள்ளது.
என்னவென்றால் கற்பக விநாயகரிடம் தும்பிக்கை வலது புறமாக இருக்கும் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. நம் பிள்ளையார் சதுர்த்தி என்று பிள்ளையார் வாங்கும் பொழுது கூட வலது புறமாக உள்ள தும்பிக்கையை வைத்த பிள்ளையாரையை சிலர் ஆர்வம் காட்டி வாங்கி செல்வார்கள் ஏனென்றால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. விநாயகரை தர்சித்தால் புனிதத்தலமாக விளங்கும் காசியில் உள்ள தீட்சா கணபதியை சென்று வணங்கிய பலன் கிடைக்கும். நாயகரே தரிசித்து வந்தால் வீட்டில் செல்வமும் ஞானமும் பெற்று விளங்குவோம் என்று கூறப்படுகிறது.
55
6.ஆறாம் படை வீடு: திருநாரையூர் :
ஆறாம் படை வீட்டின் விநாயகர் பெயர் பொள்ளாப் பிள்ளையார். பொள்ளாப் பிள்ளையார் சிதம்பரத்தில் உள்ள திருநறையூரில் உள்ளார் இவர் சுயமாக தோன்றியதால் இவருக்கு கொள்ளப் பிள்ளையார் என்று கூறப்படுகிறது பொள்ளாப் என்றால் செதுக்கப்படாமல் தானாகவே உருவான என்று பொருள்படும். சுயமாக தோன்றி இந்த பிள்ளையார் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது இவரிடம் என்ன வேண்டினாலும் பலன் கிடைக்கும் . செல்வமும் கல்வியும் ஞானமும் பெற்று சிறந்த மனிதனாக உயர முடியும் என்றும் கூறப்படுகிறது.