கோர்ட் கேஸ்னு இழுபறியாக கிடக்கும் சொத்தை மீட்க இப்படி விளக்கேற்றுங்கள்!

First Published | Jan 6, 2023, 12:02 PM IST

நம்முடைய சொத்து தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடிய சிவாலயத்தில் பஞ்சமி திதி அன்று பரிகாரம் செய்யலாம். 

மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் கொலை வரை கொண்டு விடக் கூடிய பிரச்சனை சொத்து தொடர்புடையது. உடன் பிறந்தவரோ, நெருங்கிய நண்பரோ யாராக இருந்தாலும் சொத்து என்று வருகிறபோது சிக்கல் சுமுகமாக தீர்வதில்லை. எல்லை தகராறு, ஆவணங்கள் சார்ந்த பிரச்சனைகள் மனதையும் பாதிக்கக் கூடியது. சிலர் வழக்கு தொடர்ந்துவிட்டு நீதிமன்றத்திற்கு நடையாய் நடப்பர். நம்முடைய சொத்து தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடிய புதன் அனுகிரகம் தேவை. 

மூன்றாம் இடத்தின் அதிபதி புதன் வலிமை பெற்றால் தான் சொத்து விவகாரத்தில் நமக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரங்கள். புதனுக்கு வலிமை குன்றி ராகு கேது ஆதிக்கம் அதிகமானால் சொத்து பிரச்சனையில் அசுப பலனே மிஞ்சும். ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒருவருக்கு ராகு அல்லது கேது சம்பந்தம் இருந்தால் பூர்வ சொத்து விவகாரம், சர்வே எண் மாற்றம், பாகப்பிரிவினை எல்லாவற்றிலும் சுணக்கமும், சாதகமில்லாத முடிவுகளும் ஏற்பட்டு மன அழுத்தம் உண்டாகும். 

இதையும் படிங்க; உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன திருவிழா.. மரகத நடராஜருக்கு சாத்தப்பட்ட சந்தனம் நோய் தீர்க்கும் ஐதீகம்!

Tap to resize

உடன்பிறந்தோருடன் சிறிய அளவில் தான் பிரச்சனை என்றால் பேசி தீர்க்க முயலாம். முக்கியமாக நியாயமாக அந்த சொத்து உங்களுக்கு தான் என்றால் மட்டும் பரிகாரம் செய்யுங்கள். வீம்புகாகவோ, அடுத்தவர் சொத்தை அடையும் எண்ணத்திலோ செய்தால் பலிக்காது. அதற்கு பதிலாக அந்த சொத்தை விட்டுவிட்டால் மன அழுத்தமாவது இல்லாமல் இருக்கும். இதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை காணலாம். 

சிவாலயத்தில் மட்டுமே பஞ்சமி திதி அன்று இந்த பரிகாரம் செய்யலாம். இதற்கு 9 அகல் விளக்குகள் போதும். இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபத்தை பஞ்சு திரியுடன் ஒளிர விடவேண்டும். அதை செய்த உடனே அங்குள்ள நடராஜ பெருமாள் முன்பாக நின்று ஆவணம் தொடர்பான பிரச்சனை, சொத்து விவகாரம் போன்ற கோரிக்கையை இறைவனிடம் ஒப்படையுங்கள். இந்த பரிகாரத்தை தவறாமல் 27 பஞ்சமி திதிகள் செய்துவிடுங்கள். இதை செய்து கொண்டிருக்கும்போதே பலன் கிடைத்துவிடும். ஆனால் கட்டாயம் 27 திதியில் பிரார்த்தனை செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படிங்க; Arudra Darshan 2023; நன்மைகளை வாரி வழங்கும் ஆருத்ரா தரிசன நேரம் மற்றும் தேதி முழு தகவல்!

முந்தைய பரிகாரம் செய்ய முடியாதவர்கள் செவ்வாய் கிழமை அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை (27 வெற்றிலைகள்) அணிவித்து ஒன்பது நல்லெண்ணெய் தீபம் ஒளிர செய்யுங்கள். இந்த வழிபாட்டை 48 வாரம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் பலன் கிடைக்கும். 

Latest Videos

click me!