Arudra Darshan 2023; நன்மைகளை வாரி வழங்கும் ஆருத்ரா தரிசன நேரம் மற்றும் தேதி முழு தகவல்!

First Published | Jan 6, 2023, 7:29 AM IST

ஒவ்வொரு மாதத்திலும் இறைவன் சிவ பெருமானுக்கு திவாதிரை நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்கிறார்கள். திருவாதிரை தின ஆருத்ரா தரிசனத்தில், கணவனுக்கு ஆயுள் நீள வேண்டும் என சிவனுக்கு விரதமிருந்து பெண்கள் வழிபடுவர்.

முதலும் முடிவும் இல்லாத சிவபெருமானுக்கு அணுக்கமானது திருவாதிரை நட்சத்திரம். அதனால் தான் ஒவ்வொரு மாதத்திலும் இறைவன் சிவபெருமானுக்கு திவாதிரை நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்கிறார்கள். அதிலும் குளிரும் மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு அதிகமான சிறப்பு இருப்பதாக காலங்காலமாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். 

 சிறப்பு அலங்காரங்களோடு சிவனை காண்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சிவனை காண கண் கோடி வேண்டும் என்பது போல அவர் அருள்பாலிப்பார். இந்த விஷேச திருவாதிரை தின ஆருத்ரா தரிசனத்தில், கணவனுக்கு ஆயுள் நீள வேண்டும் என சிவனுக்கு விரதமிருந்து பெண்கள் வழிபடுவர். அந்த விரதம் குடும்ப அமைதி, பொருளாதார நிலை போன்ற அனைத்து நன்மைகளையும் வாய்க்கப் செய்யும். நாம் தமிழில் திருவாதிரை எனச் சொல்லும் நட்சத்திரத்தை தான் வடமொழியில் ஆருத்ரா என்கிறார்கள்.  

Latest Videos


Image: Getty Images

கடந்தாண்டு இந்த ஆருத்ரா தரிசனம் வழிபாடு இல்லை. அதனாலே அந்தாண்டில் ஆசீர்வாதம் குறைவு என மக்கள் மனம் சற்று தளர்ந்து போனார்கள். இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தில் சிவபெருமானை ஆலயங்களில் தரிசித்து பல்வேறு நன்மைகளை பெற மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். 2023ஆம் ஆண்டை பொருத்த வரை நேற்று (ஜன.5) தான் திருவாதிரை நட்சத்திரம் வந்தது. இந்த நட்சத்திரம் 3 நாள்கள் இருக்கும். 

இந்தாண்டு திருவாதிரை தேதி

இன்று முழுக்க திருவாதிரை நீடிக்கும். (ஜனவரி மாதம் 6ஆம் தேதி (மார்கழி 21) - வெள்ளிக்கிழமை)

ஆருத்ரா தரிசன நேரம் இதோ!

திருவாதிரை நட்சத்திரம் தொடக்கம் - 5ஆம் தேதி ஜனவரி 2023 (மார்கழி 20) இரவு 9:26 மணிக்கு தொடங்கி ஜனவரி மாதம் 7 ஆம் தேதி (மார்கழி 22) இரவு 11:28 மணிக்கு நிறைவுறுகிறது. 

ஆருத்ரா தரிசன நாளில் நன்மை வேண்டும் என நினைப்பவர்கள் களி, கூட்டு ஆகியவற்றை மனப்பூர்வமாக செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைக்க வேண்டும். அன்றைய தினம் சிவ ஸ்தோத்திரங்களை அதிகம் உச்சரிக்க வேண்டும். இந்த விஷேச நாளை எதிர்நோக்கி விரதம் இருக்கும் பெண்களும், மற்றவர்களும் மார்கழி திருவாதிரையில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பிருந்து ஓராண்டு காலத்தில் நிறைவு செய்ய வேண்டும். குறிப்பாக மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்தில், எல்லா சிவன் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறும். 

இதையும் படிங்க; உங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக பீரோல இந்த நாணயங்களை வைச்சிக்கோங்க.. அப்புறம் காசுக்கு பஞ்சமே இருக்காது!

click me!