Black Vibhuti Snake bite Remedy : கருப்பு விபூதி விஷப் பாம்பு, தேள் மற்றும் பூச்சிக் கடிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது. விஷம் கடித்தவர்கள் இந்த விபூதியை நீரில் கலந்து குடித்தும், கடித்த இடத்தில் பூசியும் குணமடைவதாக ஐதீகம்.
காளிப்பட்டி கந்தசாமி கோயில் மண்ணனால் உருவாக்கப்பட்டு சிறப்புகளையும் வரலாறையும் தமிழ்நாட்டில் பாதித்துள்ளது. எங்கும் காணாத கருப்பு வண்ண மை மற்றும் கருப்பு வண்ண திருநீறு இங்குதான் உள்ளது இதன் வரலாறையும் சிறப்பையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி திருக்கோயில் முருகன் கோயில் ஆகும் இங்கு முருகன் நின்ற காலத்தில் அருள் பாலிக்கின்றார் மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோயில் என்று கூறப்படுகிறது இக்கோயில் 18 நூற்றாண்டில் லட்சுமண கவுண்டரால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் பணக்கார கோயிலில் ஒன்று என்று கூறப்படுகிறது.
24
வரலாறு:
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் முருக பக்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை ஒட்டி, கடும் விரதம் இருந்து காடு, மேடுகளை தாண்டி, விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாமல் பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார்.அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘‘இனி நீ என்னைத் தேடி பழனி வரத் தேவையில்லை. உனது இடத்திலேயே நான் குடியிருக்க விரும்புகிறேன். எனக்கு இங்கே கோவில் எழுப்பு’’ என்று அருள்கூறி மறைந்து விட்டார். அதன்படி கட்டப்பட்டதுதான் இந்த காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில்.
34
கந்தசாமி விபூதியின் மகிமை:
ஒருமுறை கறவைமாடு பால் கரக்காமல் இருந்தபோது அந்த மாட்டுக்காரர் கோயிலுக்கு வந்து நோய் ஏதும் ஏற்பட்டதாக கூறி கந்தசாமி திருநீரை மாட்டின் மடியில் தடவினார். அப்பொழுது மாட்டின் பால் கறந்தபோது குடம் குடமாக பால் வந்த அதிசயம் நிகழ்ந்தது. அதன் பிறகு கந்தசாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
விஷ நோய்களிலிருந்து தீர்வு தரும் திருநீறு: இத்தலத்தில் உள்ள விபூதி கரும்பின் சக்கையை எரித்து சாம்பலாக்கி, அதில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது பாம்பின் விஷம் உள்ளிட்ட விஷங்களை முறிக்கும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
44
பலன்கள்:
தீராத நோய்களும் இக்கோயிலுக்கு வந்து திருநீறில் தீர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. கந்தசாமி துணைவியாருடன் காட்சியளிப்பதால் இக்கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.