படுக்கையறையில் கண்ணாடி வைத்தால் இவ்வளவு பிரச்னையா? முதல்ல வாஸ்துபடி இதை செய்யுங்க!!

First Published | Jun 20, 2023, 4:49 PM IST

படுக்கை அறையில் கடைபிடிக்க வேண்டிய சில வாஸ்து குறிப்புகளை இங்கு காணலாம்.  

வாஸ்து சாஸ்திரப்படி, படுக்கை அறையில் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதை பின்பற்றாவிட்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும்; செல்வம் தங்காது, மகிழ்ச்சி நிலைக்காது. ஆகவே வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையறைக்கு கூறப்பட்டுள்ள விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.  

படுக்கையறையில் நீங்கள் தூங்கும் இடத்திம் உங்களுடைய தலைக்கு பக்கத்தில் குடம், கண்ணாடி, தண்ணீர் பாட்டில் போன்றவை வைக்கக் கூடாது. இப்படி வைப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும். வாஸ்து சாஸ்திரத்தின்படி இதை தவிர்த்தால் நன்மையே நடக்கும்.  

Tap to resize

படுக்கையறையில் நீங்கள் உறங்கும் படுக்கையை சரியான திசையில் வைப்பது முக்கியம். ஏனென்றால் படுக்கையை தவறான திசையில் வைத்தால் வாஸ்து பிரச்சனை ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவும். அப்படியானால் படுக்கையை எந்த திசையில் வைத்தால் நல்லது? தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்கலாம்.  

இதையும் படிங்க: வீட்டின் படுக்கை அறை மற்றும் சமையல் அறையில் இந்த தவறை ஒரு போதும் செய்யாதீங்க... வீட்டில் வறுமை சூழும்!

வாஸ்துவின்படி உங்களுடைய படுக்கையறையில் மறந்தும் கண்ணாடியை வைக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் படுக்கையறையில் கண்ணாடி வைத்தாலும் அதனை இரவில் தூங்க செல்லும் போது துணியால் மூடிவிடுங்கள். இதை செய்யாமல் இருப்பவர்கள் வீட்டில் பிரச்சனை தான். இரவு நேரத்தில் கணவன், மனைவி ஆகியோரின் பிம்பம் கண்ணாடியில் தெரியக் கூடாது. அப்படி தெரிவது கணவன் மனைவி உறவை பாதிக்கும். 

இதையும் படிங்க: இந்த 3 ராசிக்காரர்கள் செம்ம லக்கி!! குரு-ராகுவின் சண்டாள தோஷம் நீங்குவதால்.. இனி தொட்டதெல்லாம் வெற்றி!!

Latest Videos

click me!