விநாயகரை தான் ஒரு செயலின் தொடக்கமாக இருக்கிறார். அவரை வழிபட்டுத்தான் இந்து சமய மக்கள் காரியங்களை தொடங்குவார்கள். அதனால் தான் ஆனைமுகத்தோனை ‘ஆதி மூல கணபதி’ என சொல்லி வருகிறோம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 27 நட்சத்திரங்களையும், 3 விதமான கணங்களாக வகைப்படுத்தி தான் திருமணம் செய்யும்போது கணப்பொருத்தம் பார்ப்பார்கள். இந்தக் கணப்பொருத்தம் பொருந்தி வந்தால் தான் தம்பதிக்குள் மனஸ்தாபம் வராமல் ஒற்றுமை பிறக்கும்.
விநாயகருக்கு அணுக்கமான நாட்களான திங்கள், வெள்ளி தான். திதிகளை எடுத்துக் கொண்டால் சதுர்த்தி திதி அவருக்கு ஏற்றது என்பார்கள் பெரியவர்கள். மாசியில் வரும் சங்கடாஹர சதுர்த்தி மிகச்சிறப்பு வாய்ந்தது. வினை தீர்க்கும் விநாயகரை வணங்க ஏற்ற தினம் சங்கடஹர சதுர்த்தி என்பார்கள். இந்நாளில் வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம்.
சங்கடஹர சதுர்த்தி எப்போது?
வளர்பிறை சதுர்த்தி அன்று வானில் சந்திரனை காண்பதோ, நான்காம் பிறையை காண்பதோ கேடு தரும் என்பார்கள் ஆன்மீகப் பெரியோர். பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை சதுர்த்தி இன்னும் கூட மகிமை வாய்ந்தது. அதுதான் சங்கடஹர சதுர்த்தி. மாசி சங்கடஹர சதுர்த்தியானது அடுத்த மாதம் 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அதாவது ஆங்கில மாதமான மார்ச் 11ஆம் தேதி. சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலையில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் தாலியில் இருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்ற வேண்டும். அப்படி செய்தால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். சங்கட என்பதற்கு துன்பம் என்றும் ஹர என்பதற்கு அழித்தல் என்றும் பொருள். அதாவது நம் துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சதுர்த்தி திதி தான் மாத சங்கடஹர சதுர்த்தி என்று குறிப்பிப்படுகிறது.
சதுர்த்தி வழிபாடு
விநாயகருக்கு முன் தோப்புக்கரணம் செய்து, தலையில் குட்டிக்கொள்வார்கள். இதுதான் வழிபாட்டு வழக்கமாக இருந்து வருகிறது. தோர்பிகர்ணம் என்ற சொல்லே தோப்புக்கரணம் என வழங்கப்படுகிறது. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’ என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன் முழுப்பொருளாகும்.
புராணக்கதை
கஜமுகாசூரன் எனும் அசுரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தேவர்கள் அஞ்சினர். அதனால் அவனுக்கு முன்னால் பயத்துடன் தலையில் குட்டி கொள்வார்களாம். அந்த அசுரனை விநாயகர் கொன்றழித்தார். அதனால் விநாயகர் முன் தேவர்கள் பக்தி பொங்க தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டு கொண்டார்கள். அது தான் இப்போது நம்முடைய தோப்புக்கரணத்தின் பின்னணி என்கிறார்கள்.
விநாயகருக்கு நைவேத்தியம்
மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், அப்பம், கொழுக்கட்டை, சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை போன்றவற்றை விநாயகருக்கு படைக்கலாம். அவருக்கு மிகவும் விருப்பமான அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை ஆகியவையும், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ போன்ற பூக்களையும் வைத்து வழிபடலாம்.
இதையும் படிங்க: பூஜை ஆரத்தி தட்டில் ஏன் பணம் வைக்க வேண்டும் என்ற இந்து வழிபாட்டு பாரம்பரியம், நம்பிக்கையின் காரணம் தெரியுமா?