காதலர் தினம் 2024 : இந்த 4 ராசிக்கு காதலர் தினத்தன்று காதல் துணை அமையும்!!

First Published | Feb 8, 2024, 2:43 PM IST

காதலர் தினத்தை முன்னிட்டு இந்தாண்டு உங்களுக்கு காதல் கிடைக்குமா என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் 2024-ஆம் ஆண்டுகாதலர் தினதன்று இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதலர்கள் தங்கள் காதலை தங்கள் துணையிடம் வெளிப்படுத்துகிறார்கள். இந்நாள் சிறப்பு பரிசுகளுடன் கொண்டாடப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க,  திருமணம் ஆகாதவர்கள் தங்கள் காதலை காதலித்தவர்களிடம் தெரிவிக்க காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்களின் இருப்பிடத்தைப் பொறுத்தே துணை கிடைக்கும். எனவே, இந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று கிரக நிலையின்படி சில ராசிக்காரர்களுக்கு காதல் அதிஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியென்றால், காதலர் தினத்தில் எந்த ராசிக்கு அதிஷ்டம் கிடைக்கும் என்றுப் பார்ப்போம்.

Tap to resize

ரிஷபம்: ரிஷபத்தின் 7வது வீடு வியாழனின் செல்வாக்கின் கீழ் உள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் இந்த காதலர் தினத்தன்று புதிய உறவில் நுழையலாம். தனிமையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணை கிடைக்கும். அதுவும் அவர்கள் நினைத்த வாழ்க்கை துணையை பெறலாம். அவை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். ஏற்கனவே திருமணமான அல்லது காதலித்தவர்கள், ஒரு ஆழமான உறவைக் கொண்டிருப்பார்கள்.

கடகம்: பிப்ரவரி 14 அன்று, கடக ராசிக்காரர்களுக்கு புதிய வாழ்க்கைத் துணை கிடைக்கும். அவர்கள் ஏற்கனவே காதலித்திருந்தால், அவர்கள் திருமணம் வாழ்க்கையில் நுழைய வாய்ப்பு அதிகம். மேலும், இதுவரை காதல் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தவர்களின் தேடல் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே, இந்த ஆண்டு காதலர் தினத்தில் உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதாவது, இதுவரை காதல் கிடைக்காதவர்களுக்கு இந்த வருடம் ஒரு நல்ல துணை கிடைக்கும் என்று அர்த்தம். மேலும் ஏற்கனவே, காதல் அல்லது திருமணம் உறவில் இருப்பவர்களின் அன்பு வலுவடைகிறது.
 

மகரம்: நீங்கள் இந்த காதலர் தினத்தில் உங்களுக்கு காதல் துணை நிச்சயம் கிடைக்கும். அதுபோல், காதலர்கள் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இது உறவை பலப்படுத்தும்.

Latest Videos

click me!