Kantha Sasti: முருகப்பெருமான் திருக்கல்யாணம் பார்ப்பதால் இவ்ளோ நன்மையா? எல்லா தடைகளும் காணாமல் போகும் தெய்வ ரகசியம் இதுதான்.!

Published : Oct 27, 2025, 11:07 AM IST

கந்த சஷ்டிக்கு மறுநாள் நடைபெறும் முருகர் திருக்கல்யாண தினம், திருமணத் தடைகளை நீக்கி, குழந்தை பாக்கியம் அருளும் புண்ணிய நாள். இந்நாளில் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய செட் வழங்கி வழிபட்டால் வளமும் அமைதியும் நிலைக்கும்.

PREV
14
திருச்செந்தூரில் குமரனுக்கு கொண்டாட்டம்

சூரசம்ஹாரத்துடன் கந்த சஷ்டி திருவிழா நிறைவடைந்த மறுநாளே “முருகர் திருக்கல்யாண தினம்” எனும் மிகப்பெரும் புண்ணிய நாள். இந்த நாளில் முருகப்பெருமான் தெய்வான தேவசேனையுடன் திருமணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்நாளில் முருகன் ஆலயங்களில் திருக்கல்யாண விழா மிகுந்த ஆனந்தத்துடன் நடைபெறுகிறது.

24
திருமணத் தடைகள் நீங்கும்

இந்த நாளில் முருகர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது மிகுந்த புண்ணியமானதாகும். திருமணத் தடைகள் நீங்க, தம்பதியர் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்க, குழந்தைப் பாக்கியம் பெற ஆகிய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை அடங்கிய “திருமாங்கல்ய செட்டை” ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாங்கி செல்ல வேண்டும். திருக்கல்யாணம் நடைபெறும் வேளையில் அங்கு இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு அதனை வழங்கி அவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றால் வாழ்வில் வளமும் அமைதியும் நிலைக்கும்.

34
எதிர்பாராத நன்மைகள் நிகழும்

முருகனின் அருளை என்றும் தங்களோடு நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவோர், திருக்கல்யாண தரிசனத்திற்குப் பிறகு வீட்டிலும் முருகர் வழிபாடு செய்யலாம். மனமார முருகரை வேண்டினால் அவர் அருளால் சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கி, எதிர்பாராத நன்மைகள் நிகழும். திருமண உறவில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் ஒற்றுமையாக மாறி, மன அமைதி ஏற்படும். 

44
குறைகள் யாவும் தீருமே

மொத்தத்தில், முருகர் திருக்கல்யாண தினத்தில் நடைபெறும் வழிபாடு ஆன்மீகத்தையும், குடும்ப மகிழ்ச்சியையும், வாழ்க்கை வளர்ச்சியையும் தரும் தெய்வீக வாய்ப்பாகும். முருகப்பெருமானை நம்பி பக்தியுடன் வழிபட்டால், அவர் அருளால் நம் வாழ்க்கை முழுதும் சுபமாய் விளங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories