கோர்ட், கேஸ் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி; நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கொடுக்கும் ஒரே கோயில்!

Published : Jan 08, 2026, 08:06 PM IST

Kanchipuram Sri Vazhakarutheeswarar Temple : காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் வழக்குகளைத் தீர்த்து வைப்பதில் உலகப் புகழ்பெற்றது. இக்கோயிலின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
15
Kanchipuram Vazhakarutheeswarar Temple History Tamil

சிவன் கேட்டால் கிடைக்காத பலனே இல்லை. வழக்கு பிரச்சனை இருந்து விடுபட போராட்டமும் மனிதர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில். காந்தி சாலையில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயில். இங்கு வழிபட்டால் சட்டரீதியான வழக்குகள், குடும்பப் பிரச்சனைகள் நீங்கி, வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, எனவே அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் இங்கு வந்து வழிபடுகின்றனர். "வழக்கை அறுப்பவர்" என்ற பொருளைத் தரும் இக்கோயில், சோடாச லிங்க மூர்த்திகளில் ஒன்று, மேலும் பக்தர்கள் 16 திங்கட்கிழமை நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு பலன் பெறுகின்றனர்.

25
Temple to win court cases in Tamil Nadu

கோயிலின் வரலாறு: ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தது தேவர்களுக்கு துணையாக திருமால் நின்று போர் செய்தார். அசுரர்கள் பயந்து ஓடி பிருகு முனிவரின் மனைவியும் லட்சுமியின் தாயுமான கியாதி இடத்தில் தஞ்சம் புகுந்தனர். திருமால் சினம் கொண்டு தன் மாமியார் என்று பாராமல் தலையை கொய்தார். அசுரர்களை வதம் செய்தார். இதைக் கண்டு பிருகு முனிவர் திருமாலைப் பார்த்து பத்து பிறப்புகள் எடுத்து இவ்வுலகில் உழலுமாறு சபித்து விட்டார். 

35
Sri Vazhakarutheeswarar Temple Pooja details

மேலும் பிருகு முனிவர் சுக்கிரன் துணை கொண்டு தன் மனைவியை உயிர் பெறச்செய்தார். திருமால் மனம் வருந்தி காஞ்சிக்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு பரிகாரம் வேண்டி நின்றார். திருமகளுக்கு பிருகு முனிவர் சபித்த பத்து பத்து பிறப்புக்களும் உலகத்திற்கு உபகாரமாக ஆகுமாறு அருள் செய்து பிருகு முனிவரின் சாபத்தினால் அறிவடைந்த பயத்தை போக்கி அருளினார். இதனாலையே எம்மூர்த்திக்கு ஹரிசாப பயம் தீர்த்த பெருமான் எனத் திருநாமம் கொண்டு விளங்குகிறார்.

45
Famous Shiva temples in Kanchipuram for legal issues

இந்த தெய்வத்துக்கு எந்த கிரகம் பெயர் கொடுத்திருக்கிறது சூரியன் - சனி-புதன்-சந்திரன் இந்த கிரகம் இந்த தெய்வத்திற்கு பெயர் கொடுத்திருக்கிறது. வம்பு வழக்கு பிரச்சனை உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் வழக்குகளில் வெற்றி பெறலாம்.

வேண்டுதல்: சொத்து பிரச்னை உள்ளவர்கள் சொத்தில் வழக்கு உள்ளவர்கள் இக்கோயிலில் கங்கா தீர்த்தம் அபிஷேகம் செய்து அந்த சொத்து இருக்கும் இடத்தில் தெளித்து விட்டால் சொத்து பிரச்னை விரைவில் முடிவடையும்.

55
How to solve property disputes by worshipping Lord Shiva

பணியில் இருக்கும் ஊழியர்கள் வேலையில் பிரச்னை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து பன்னீர் அல்லது மழை நீர் அபிஷேகம் செய்தால் வேலையில் இருக்கும் பிரச்னை தீரும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories