Today Rasipalan 02nd Feb 2023 | இன்றைய ராசிபலன்

Published : Feb 02, 2023, 05:30 AM IST

Today Rasipalan 02nd Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (02/02/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 02nd Feb 2023 | இன்றைய ராசிபலன்

தாய்வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபமும், மேன்மையும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 

212

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையும், ஒருவிதமான சோர்வுகளால் செயல்பாடுகளில் தாமதமும் ஏற்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரம் சம்பந்தமான ரகசியங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் விவேகத்தை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.
 

312

கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுவிதமான ஆசைகள் மற்றும் எண்ணங்கள் மேலோங்கும். அன்பு நிறைந்த நாள்.
 

412

குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள் மறையும். திருத்தலம் தொடர்பான பயணங்கள் கைகூடும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்வு பிறக்கும் நாள்.
 

512

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். வியாபார பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெற்றிகரமான நாள்.
 

612

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வீடு மற்றும் மனை வாங்குவது, விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். திட்டமிட்ட செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.
 

712

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
 

812

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
 

912

உத்தியோக பணிகளில் மற்றவரை நம்பி இருக்காமல் நீங்களே முடிப்பது சிறப்பு. தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்படும். வாக்குறுதிகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்களும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
 

1012

குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். புதிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அனுபவம் வெளிப்படும் நாள்.
 

1112

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மகிழ்ச்சியான நாள்.
 

1212

மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories