December 9th | இன்றைய ராசிபலன் : கடகம் - தடங்கள்! சிம்மம் - எதிர்ப்பு! மற்ற ராசிகளுக்கு உள்ளே!

First Published | Dec 9, 2022, 7:15 AM IST

Horoscope Today- Indriya Rasipalan December 9th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (09/12/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

மேஷம்:
எந்தவொரு தனிப்பட்ட முடிவையும் எடுப்பதற்கு முன் அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுவது நல்லது. காலத்திற்கேற்ப நடத்தையை மாற்றிக் கொள்வது அவசியம். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவணம் தேவை.

ரிஷபம்:
எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வேலையைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பால் பல பிரச்சனைகளும் தீரும். மாணவர்கள் உயர்கல்விக்கு சில தடைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் இருக்கும்.

Latest Videos


மிதுனம்:
எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் குழப்பம் ஏற்பட்டாமல் இருக்க, நெருங்கிய நபருடன் கலந்துரையாடுங்கள் நிச்சயமாக நீங்கள் சரியான ஆலோசனையைப் பெறுவீர்கள். நேரம் சாதகமாக உள்ளது. வணிகச்சூழல் மந்த நிலையில் இருக்கும்

கடகம்:
சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது நிம்மதி தரும். சொத்து சம்பந்தமான வேலைகளில் சில பிரச்சனைகள் வரலாம். ஆன்மிக வழிபாடு மூலம் மன நிம்மதி கிடைக்கும். பயணங்கள் தடைபடலாம்.

சிம்மம்:
குடும்ப உறுப்பினர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன், அதைப் பற்றிய முழு விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள். அரசு வேலைகள் தொடர்பான எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.

கன்னி:
முயற்சி செய்வதன் மூலம் தான் விரும்பிய வேலையை முடிக்க முடியும். பிறர் விஷயங்களில் தலையிடவோ, வேண்டாத அறிவுரைகளையோ கூறாதீர்கள். ஒருவித அவமானம் உங்கள் மீது விழலாம். எந்தவொரு குறிப்பிட்ட பிரச்சினையையும் தீர்மானிப்பதற்கு முன் குடும்ப உறுப்பினர்களை ஆலோசிக்கவும்.
 

துலாம்:
உங்கள் தடைபட்ட பணிகளை ஒரு சிறப்பு நபரின் உதவியுடன் முடிக்க முடியும். எந்தவொரு புதிய முதலீடு அல்லது புதிய வேலையிலும் கவனமாகச் செய்யுங்கள். வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் அதிக செலவு ஏற்படும்.

விருச்சிகம்:
கடினமான நேரங்களை எளிதில் அனுசரித்து செல்வீர்கள். அக்கம் பக்கத்தினருடன் எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். பொறுமை அவசியம். வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதிக வேலை பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம்.
 


தனுசு:
தொழில் தொடர்பான போட்டியில் வெற்றி கிடைக்கும். ரூபாய் பரிவர்த்தனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். ஆன்மிக வழிபாடு மன அமைதியைத் தரும். மின்சாதனப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும்,

 

மகரம்:
சில நாட்களாக இருந்து வந்த கவலைகள் தீரும். எங்கும் பேசும்போது எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவொரு வணிக முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

கும்பம்:
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருங்கள். ஒரு பெரியவரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். கவனக்குறைவாக அல்லது அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழிலில் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். அதிக வேலை உடல் சோர்வை தூண்டும்,
 

மீனம்:
நண்பரிடம் கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெறலாம். வருமானம் குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருக்கலாம். மற்றவர்களைச் சந்திக்கும் போது உங்கள் கண்ணியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வணிகம் தொடர்பான நடவடிக்கைகளில் அதிக அறிவு மற்றும் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுங்கள்.
 

click me!