Horoscope Today- Indriya Rasipalan December 8th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (08/12/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மனம் சொல்படி கேட்டு வேலை செய்தால் வெற்றி கிடைக்கும். உங்கள் வருமானம் மேம்படும். மேலும் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும். அவசரப்பட்டு எந்த திட்டத்தையும் செய்ய வேண்டாம். உணர்ச்சியில் முடிவெடுப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
212
ரிஷபம்
உங்கள் முழு கவனமும் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் இருக்கும். வாஸ்து விதிகளை பின்பற்றினால் சரியான பலன் கிடைக்கும். எதிர் பாலினத்தவருக்கு கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏதோ ஒரு விஷயத்தில் தகராறு ஏற்படலாம்.
312
மிதுனம்
உங்கள் தனிப்பட்ட திறமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மீண்டும் புத்துணர்ச்சி அடைவீர்கள். சில சமயங்களில் உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணம் எழலாம், கூட்டாண்மை தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும்.
412
கடகம்
இன்று உங்களுக்குள் நம்பிக்கையும் ஆற்றலும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள். பிள்ளைகளைப் பற்றி மனதில் ஏதோ ஒரு கவலை இருக்கும். பணிபுரியும் துறையில் உள்ள பணியாளர்களுக்கு உங்கள் முக்கியத்துவம் தெரியவரும். அதிகம் கோபப்படாதீர்கள் நாள் நிறைவாக கழியும்.
512
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், உங்கள் ராசியில் அமர்ந்து உங்களுக்கு முழு ஆற்றலையும் நம்பிக்கையையும் தருகிறார். இன்று, கிரக நிலை உங்களுக்கு முற்றிலும் சாதகமாக உள்ளது. இன்று யாருடனும் கூட்டு சேர வேண்டாம். துணையுடன் சில மனக்கசப்புகள் வரலாம்.
612
கன்னி
இன்று உங்கள் பெரும்பாலான நேரத்தை வெளிப்புற நடவடிக்கைகளில் செலவிடுவீர்கள். சில புதிய நபர்களுடனான அறிமுகம் கிடைக்கும். நெடுந்தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப வியாபாரத்தில் முன்னேற்றம் கூடும்.
712
துலாம்
உங்கள் லட்சியங்களை நிறைவேற்ற கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் முழு கவனமும் நிதி நிலையை வலுப்படுத்துவதில் இருக்கும். தற்போதைய வணிகம் அல்லது,புதிதாக ஏதாவது செய்ய நீங்கள் திட்டமிட்டால், அதைப் பற்றி சிந்தியுங்கள் வாழ்க்கை சிறக்கும்.
812
விருச்சிகம்
இன்று உங்களின் சாணக்கியக் கொள்கையின் மூலம் எந்த வேலையையும் செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த காலத்துடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையும் மீண்டும் எழலாம். இதனால் பதற்றம் அதிகரிக்கும். பொறுமை அவசியம்
912
தனுசு
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் வருமானத்திற்கேற்ற செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உங்கள் உறவினர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம்.
1012
மகரம்
ஒவ்வொரு பணியையும் செய்வதற்கு முன் திட்டமிட்டு யோசிப்பது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். வெளிநாடு செல்ல உள்ளவர்களுக்கு சுப அறிவிப்புகள் வரும். சில நேரங்களில் முக்கியமான சாதனைகள் அதிக சிந்தனையில் நழுவிவிடும்.
1112
கும்பம்
இன்று நீங்கள் அதிக நேரத்தை வீட்டிற்கு வெளியிலேயே செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் வீட்டின் ஏற்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கணவன்-மனைவி இருவரும் அவரவர் பணிகளில் மும்முரமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்க முடியாது.
1212
மீனம்
இன்று புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். பொது வியாபாரம் மற்றும் கல்வி தொடர்பான வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.