Today Rasipalan 25 Dec 2022 | இன்றைய ராசிபலன் : இன்றைய நாளின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும் ராசிகள்!

Published : Dec 25, 2022, 05:30 AM IST

Today Rasipalan 25 Dec 2022 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (25/12/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 25 Dec 2022 | இன்றைய ராசிபலன் : இன்றைய நாளின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும் ராசிகள்!
மேஷம்

இன்று நீங்கள் ஒரு முக்கியமான நபரை சந்திக்கலாம், இந்த சந்திப்பு எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது அவசியம்.
 

212
ரிஷபம்

இன்ற வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சில தீர்மானங்களையும் எடுப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகளை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளின் கல்வி மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகளால் செலவுகள் கூடும்.
 

312
மிதுனம்

இன்றைய நாள் இனிய நிகழ்வுடன் தொடங்கும். நிலம் சம்பந்தமான எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். வருமான வழிகள் அதிகரிக்கும், அதே நேரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மன அழுத்தம் ஏற்படும்.
 

412
கடகம்

வீட்டில் ஒழுங்கை பராமரிக்க முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு பாதகமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும். மாணவர்கள் படிப்பு தொடர்பான பணிகளில் வெற்றியும், நல்ல பலன்களும் அடைவார்கள். பிறர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
 

512
சிம்மம்

பிற்பகல் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு எந்த கதவும் திறக்கலாம். அதற்கு அதிக முயற்சி மட்டுமே தேவைப்படும். மாணவர்களும் எதிர்பார்த்தபடி பலன் கிடைத்து ஆறுதலையும் மகிழ்ச்சியையும் பெறுவார்கள். அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
 

612
கன்னி

நேரம் கடந்து பலன் தரும். ஒரு சில பணிகள் தடைபடலாம், ஆனால் காலப்போக்கில் கவனம் செலுத்துவது வெற்றிக்கு வழிவகுக்கும். விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பொருளாதார சூழ்நிலையில் சற்று அலைச்சலால் மனம் கலங்கும்.
 

712
துலாம்

இன்று உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்பீர்கள். சில நாட்களாக இருந்து வந்த பதற்றம் நீங்கும். மாணவர்கள் எந்த ஒரு போட்டித் தேர்விலும் வெற்றி பெற இது சரியான நேரமாக மாறி வருகிறது. வேலை பளு அதிகரிக்கும். எந்த பிரச்சனையும் நிதானமாக தீர்க்க முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
 

812
விருச்சிகம்

வீட்டு அலங்காரம் மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்காக குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இருக்கும். ஷாப்பிங் போன்றவற்றிலும் இனிமையான நேரம் செலவிடப்படும்.இளைஞர்கள் எந்த வேலையிலும் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நல்ல பலனைப் பெறுவார்கள்.
 

912
தனுசு

வரவு மற்றும் செலவில் சமத்துவம் பேணப்படும். வீட்டைப் பழுதுபார்க்கும் போது அல்லது மேம்படுத்தும் போது வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது நல்லது. நாளின் இரண்டாம் பாதியில் சில பிரச்சனைகள் வரலாம். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.கவர்ச்சி, கலை, அழகு தொடர்பான வியாபாரத்தில் மனதுக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும்.
 

1012
மகரம்

உங்களின் சமூக மதிப்பும் உயரும். இன்று கொடுக்கும் பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதால், யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். சிறிய விஷயங்களால் உங்கள் மனம் சிதறக்கூடும். உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்.
 

1112
கும்பம்

உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் மரியாதை கூடும். மாணவர்களும், இளைஞர்களும் தங்களுடைய நேரத்தை வீணடிக்கக் கூடாது. உங்களின் கவனம் முழுவதுமாக வேலைத் துறையில் இருந்தல் வேண்டும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
 

1212
மீனம்

உங்கள் அறிவுத்திறன் மூலம் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். புதிய திட்டங்கள் மனதில் தோன்றும், நெருங்கிய உறவினர் உதவியுடன் அந்த திட்டங்களைத் தொடங்குவீர்கள். சில நேரங்களில் உங்கள் கோபமும் பொறுமையின்மையும் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories