மேஷம்:
இன்று உங்களுக்குள் ஒரு அற்புதமான நாள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தையும் இன்று கிடைக்கலாம். நீங்கள் பல சவால்களை சந்திப்பீர்கள். எதிர்கொண்டால் வெற்றி பெறலாம். ஆனால் ஒரு சிறிய பின்னடைவு கூட பெரும் சேதத்தை ஏற்படுத்தும். மனம் சில சமயம் விரக்தி அடையலாம்.
ரிஷபம்:
இன்றைய நாள் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவை சிறப்பாக வைத்திருக்க உங்களின் சிறப்பான பங்களிப்பு இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். அவர்களை சரியாக வழிநடத்துவது உங்கள் பொறுப்பு.
மிதுனம்:
வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிழவும். உங்கள் விருப்பம் மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப நாள் கடந்து செல்லும். மக்கள் மத்தியில் யாரையும் விமர்சிக்கவோ, கண்டிக்கவோ வேண்டாம். நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
கடகம்:
இன்று, நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் புதிய வெற்றியை அடைய முடியும். பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் அதிகப்படியான செலவு பட்ஜெட்டை மோசமாக்கும். எனவே உங்கள் ஆசைகளை கட்டுப்படுத்துங்கள். இல்லையேல் பிரச்சனையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்:
இன்று பணம் சம்பாதிக்கும் வாய்புகள் அதிகம். உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். நண்பர்களுடன் ஏற்படும் மோதல்கள் சகஜம். மனைவியுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கன்னி:
இன்று மன நிம்மதியுடன் தினசரி மற்றும் அன்றாட நடவடிக்கைகளும் தொடரும். அரசாங்க விவகாரங்கள் தொல்லை தரலாம். வியாபாரத்தில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குங்கள் மகிழ்ச்சி கூடும்.
துலாம்:
உங்கள் புதிய திட்டங்களை தொடங்க இன்று நல்ல நாள். ஆக்கப்பூர்வமான படைப்புகள் பிரதானமாக இருக்கும். வீட்டில் அதிக ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். வியாபாரத்தை அதிகரிக்கும் திட்டம் இருந்தால் அதை தொடங்க சரியான நேரம்.
விருச்சிகம்:
ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள்.
தனுசு:
இன்றைய நாள் நன்மை தரும் நாள். மற்றவர்களின் பார்வையில், உங்கள் எண்ணம் மேம்படும் மற்றும் உறவுகள் வலுவடையும். அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்களால் நீங்கள் எரிச்சலடைவீர்கள். இது உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும்.
மகரம்:
உங்கள் வார்த்தைகள் மூலம் எல்லா தடைகளையும் தாண்டி முன்னேறலாம். சில நேரங்களில் அதிகமாக சிந்திப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அந்நியர்களால் மன உளைச்சல் ஏற்படலாம்.
கும்பம்:
உங்கள் குடும்பம் மற்றும் தொழில் பொறுப்புகளை சரியாக கையாள்வீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் சற்று மோசமடையலாம். உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள் திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
மீனம்:
படிப்பவர்களுக்கு வெற்றிகரமான நாள். வீட்டு பேச்சுவார்த்தையில் சண்டை சச்சரவு ஏற்படும். சில சமயம் உங்களின் பிடிவாத குணம் மற்றவர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.