Temple: கோவில் பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே வீட்டிற்கு வரணுமா? தரிசனத்திற்கு பின் 'இதை' பண்ணுங்க!

Published : Jul 16, 2026, 01:00 PM IST

Temple: கோவிலுக்கு செல்வது முக்கியம் அல்ல. கோவிலின் பாசிடிவ் எனர்ஜியை வீட்டுக்கு கொண்டு வருவது தான் முக்கியம். கோவிலில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
கோவிலுக்கு சென்று விட்டு ஏன் நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டும்?

நாட்டில் முக்கிய விஷேச நாட்களில் அனைவரும் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் பாரம்பரிய ஆன்மிக நடைமுறைகளில் மிக முக்கியமானது, "கோவிலுக்குச் சென்று வந்தவுடன் நேராக வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும், வேறு எங்கும் போகக் கூடாது" என்ற அறிவுரையாகும். இதற்குப் பின்னால் ஆழமான ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்கள் மறைந்துள்ளன. இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

24
கோவிலின் பாசிடிவ் எனர்ஜி

கோவிலின் கருவறை என்பது நேர்மறை ஆற்றல் (Positive Energy) நிறைந்த ஒரு மையப்புள்ளியாகும். அங்குள்ள மூலவர் சிலை, மந்திர உச்சாடனங்கள், யாகங்கள் மற்றும் மூலிகைகளின் நறுமணம் ஆகியவற்றால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள் நம் உடலிலும், மனதிலும், நாம் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் ஒட்டிக்கொள்கின்றன.

நாம் கோவிலில் இருந்து நேராக நம் இல்லத்திற்குச் செல்லும்போது, அந்தத் தூய்மையான ஆன்மிக ஆற்றல் அப்படியே நம் வீட்டிற்குள் நுழைகிறது. இதனால் நம் இல்லத்தில் எதிர்மறை சக்திகள் நீங்கி, சுபிட்சம் பெறுகிறது. மாறாக, கோவிலில் இருந்துவிட்டு நேராக ஒரு கடைக்கோ, பொழுதுபோக்கு இடங்களுக்கோ அல்லது பிறர் வீட்டிற்கோ சென்றால், அந்த தெய்வீக ஆற்றல் அங்கு சிதறிவிடும்; நம் வீட்டிற்குச் சென்றடையாது என்பது ஐதீகம். இதனாலேயே, வீட்டிற்குச் சென்றவுடனும் கூட உடனடியாகக் கை, கால்களைக் கழுவக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

34
கோவிலில் செய்யக்கூடாத தவிர்க்க வேண்டிய செயல்கள்

ஆலய வழிபாட்டின் பலன்களை முழுமையாகப் பெற, கோவிலுக்குள் சில விஷயங்களைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்:

கால்களை நீட்டி அமர்தல்: தரிசனம் முடிந்து கொடிமரத்தின் அருகே அமரும் போது, இறைவனுக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக கால்களை நீட்டிக்கொண்டு அமரக் கூடாது. சம்மணமிட்டு மட்டுமே அமர வேண்டும்.

பிரசாதத்தை வீணடித்தல்: விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைத்த பின், மீதமிருப்பதைத் தூண்களிலோ அல்லது சுவர்களிலோ கொட்டி ஆலயத்தைத் தூய்மைக்கேடு செய்யக் கூடாது.

அதிவேக வலம் வருதல்: பிரகாரத்தை அவசர அவசரமாக ஓடி வலம் வரக் கூடாது. மனதிற்குள் இறைநாமத்தை ஜெபித்தபடி, அமைதியாகவும் நிதானமாகவும் வலம் வர வேண்டும்.

44
நேராக நின்று தரிசிப்பது கூடாது ஏன்?

முழுச் சுற்று (சிவன் கோவில்): சிவன் கோவிலில் அபிஷேக நீர் வரும் 'கோமுகி' பகுதியைத் தாண்டி முழுமையாகச் சுற்றக் கூடாது. அரைவட்ட வடிவிலேயே வலம் வர வேண்டும்.

நேராக நின்று தரிசிப்பது: மூலவர் சிலை அல்லது நந்திக்கு நேர் எதிரே மறைப்பது போல் நின்று தரிசனம் செய்யக் கூடாது. சற்று ஓரமாக நின்றுதான் வழிபட வேண்டும்.

அரட்டை அடித்தல்: கோவிலுக்குள் உலக விஷயங்களைப் பேசுவதோ, வதந்திகள் பேசுவதோ கூடாது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கோவில் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அது நம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் ஓர் ஆற்றல் மையம். இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆலய வழிபாட்டின் முழுமையான நன்மைகளைப் பெற்று, வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் அடைய முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories