வீட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துபோனால் உடனே வாங்கி வைத்துவிடுவோம். ஆனால், சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு தீர்ந்துபோனால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாமா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் ஆன்மிக நம்பிக்கைகள் இருக்கின்றனவா?
குறிப்பாக, உப்புக்கும் மகாலட்சுமியின் அருளுக்கும், வீட்டின் செல்வ வளத்துக்கும் தொடர்பு இருப்பதாகச் சிலர் நம்புகிறார்கள். உப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்கும் பொருள் மட்டுமல்ல. பல்வேறு கலாசாரங்களிலும் பாரம்பரிய நம்பிக்கைகளிலும் அது தூய்மை, பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
வீட்டில் உப்பு இல்லாமல் போவது, உப்பைக் கடனாகக் கொடுப்பது, வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்குவது என ஒவ்வொன்றைப் பற்றியும் பலவிதமான நம்பிக்கைகள் சொல்லப்படுகின்றன.
அப்படியானால், வீட்டில் உப்பு தீர்ந்துபோனால் உண்மையிலேயே செல்வம் குறையுமா? அதிர்ஷ்டம் பாதிக்கப்படுமா? இந்த நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.