Head bath
இந்து மதத்தில் காலை முதல் இரவு வரை பல விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.வேதத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை கடைபிடித்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள். மேலும், இந்த விதிகளை மீறினால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தலைக்கு குளிப்பது தொடர்பான விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் படி, வாரத்தின் சில நாட்களில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. அது எப்போது தெரியுமா?
Head bath on Tuesday, Thursday, Saturday
செவ்வாய் மற்றும் வியாழன்: திருமணமான பெண்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குளிக்கக் கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது. திருமணமான பெண் இந்த நாட்களில் குளித்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், வெள்ளிக் கிழமை லட்சுமி தேவிக்கு உரியது. எனவே, திருமணமான பெண்கள் இந்நாளில் நீராடி, லட்சுமி தேவியை வழிபட்டால், அம்மனின் அருள் உங்களுக்கு கிடைக்கும். நிதி பிரச்சனைகளும் நீங்கும்.
இதையும் படிங்க: RO வேஸ்ட் வாட்டரில் குளிக்கலாமா? தெரிஞ்சிக்க படிங்க ஆனா 'ஷாக்' ஆகாம படிங்க..!!
Head bath for men
வியாழன்: வியாழன் அன்று ஆண் பெண் இருபாலரும் தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம். பெற்றோரை இழந்தவர்கள் அமாவாசை அன்று தலைக்கு குளிக்கலாம். பெற்றோர் இருப்பவர்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறுவது உண்டு. அதேபோல் கணவரை இழந்த பெண்கள் மட்டுமே அமாவாசை அன்று தலைக்கு குளிக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D