Published : Sep 12, 2026, 04:46 PM ISTUpdated : Sep 13, 2026, 10:17 PM IST
Vinayagar Chaturthi Wishes, Quotes and Messages for Loved Ones: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு உங்கள் நண்பர்களுக்கு என்னென்ன வாழ்த்துக்கள் அனுப்பலாம் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, 2026 ம் ஆண்டு செப்டம்பர் 14ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகரின் பிறப்பைக் கொண்டாடும் இந்த விழா, 10 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடக்கும். இந்த நாட்களில், வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவார்கள். தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது. இம்முறை திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையும் கிடைத்துள்ளது.
விநாயகர் உங்கள் இல்லத்திலும் வாழ்விலும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
இந்த விநாயகர் சதுர்த்தி அன்று, நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்று விநாயகரிடம் பிரார்த்திப்போம். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
கணபதி பப்பா மோரியா! விநாயகரின் வருகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும்!