மகாலட்சுமிக்கு தானியங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் கையில் இருந்து அரிசி உள்ளிட்ட உண்ணும் தானியங்கள் தவறி விழுவது லட்சுமியை வருத்தப்பட செய்யும். செல்வத்தின் கடவுளான லட்சுமி வருந்தினால் உங்கள் வீட்டில் சுபிட்சம் இருக்காது. தானியங்கள் கீழே விழுந்தாலும் அல்லது உங்கள் காலில் பட்டாலும் அதை எடுத்து நெற்றியில் ஒத்தி வருந்த வேண்டும்.
கடுகு எண்ணெய், கருப்பு மிளகு ஒருபோதும் தரையில் விழாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் சனி பகவானுடன் கடுகு எண்ணெய் தொடர்பு கொண்டுள்ளது. தரையில் கொட்டிய கடுகு எண்ணெய், சனி பகவானை வருந்த செய்யும். கையில் எண்ணெய் பாட்டில் வைக்கும்போது கவனமாக இருக்கவேண்டும்.