உங்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு காண்கிறீர்களா?அதன் அர்த்தம் இதுதான்!!

ஒவ்வொரு கனவும் நல்ல அல்லது அசுபமானதைக் குறிக்கிறது. உங்கள் கனவில் நீங்கள் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் கண்டிருந்தால், அதற்கும் ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு. அதைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாகவே, தூக்கத்தில் பல கனவுகள் வரும். நீங்கள் எழுந்தவுடன், அது நினைவில் இருப்பது அரிது. ஆனால் சில கனவுகள் மறக்க முடியாதவை. கனவில் பல அற்புதங்கள் காணப்படுகின்றன. நம் நிஜ வாழ்க்கையில் நடக்காத அனைத்தும் நம் கனவில் நடப்பதாகவே தோன்றுகிறது. சில கனவுகள் நிஜமாகும்போது பயமாக இருக்கும்.
 

அதேபோல, பலர் தங்கள் கனவில் தங்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு காண்கிறார்கள். இப்போது அதற்கான அர்த்தம் என்னவென்று இங்கு பார்க்கலாம்.


நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டால், அது நல்ல அறிகுறி என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மேலும், நீங்கள் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம் அல்லது உங்களுக்கான துணையை விரைவில் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

இதையும் படிங்க: கனவில் காதலியை பார்த்தால் இதுதான் அர்த்தம் தெரிஞ்சிகோங்க..!

மேலும், திருமணத்தில் மணமகனும், மணமகளும் பட்டு ஆடை உடுத்தி இருப்பார்கள். ஆனால் அது கிழிந்த மாதிரி நீங்கள் கனவு கண்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம். புதிய உறவுகளில் ஈடுபடுவதற்கான பயத்தைக் குறிக்கிறது.

இதையும் படிங்க:  உங்களை கனவில் கண்டால் அது நல்லதா கெட்டதா? கனவு அறிவியல் என்ன சொல்கிறது?

அதேபோல, திருமணமான பிறகும் நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கனவு கண்டால், உங்கள் தற்போதைய உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மேலும் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை சரி செய்யுங்கள். வேறு திருமணம் பற்றி நினைக்க வேண்டாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!