தப்பி தவறி கூட துளசி செடிக்கு பக்கத்தில் இந்த பொருட்களை வைக்காதீங்க... உங்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கும்!

First Published | Oct 31, 2023, 4:59 PM IST

இந்து மத நூல்களில் துளசி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. எனவே, இதனை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் வளர்த்து, வணங்கி வருகின்றனர். இதனை நீங்கள் வணங்கும்போது விஷ்ணுவை மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது.

வீட்டில் துளசியை நட்டு விட்டால் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டது என்று அல்ல, அந்த துளசியை நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் துளசிக்கு அருகில் வைக்கக்கூடாத சில விஷயங்கள் உள்ளன அவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

முள் செடிகள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, முள் செடி மற்றும் மரங்களை துளசி செடிகளுக்கு அருகில் வைக்க கூடாது. அவ்வாறு வைத்திருப்பது, வீட்டில் எதிர்மறையான சக்தி அதிகரிக்கிறது மற்றும் வாழ்க்கையில் சிரமங்களை அச்சுறுத்துகிறது.

இதையும் படிங்க:  துளசி செடியை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க.. பெரும் நிதி இழப்பு ஏற்படுமாம்..

Tap to resize

காலணிகள்: துளசிக்கு அருகில் எந்த ஒரு செருப்புகளையும் வைக்க கூடாது இது அன்னை துளசியை அவமதிக்கிறது. இதனால் வீட்டில் வறுமை, மகிழ்ச்சி, செழிப்பு இழப்பு ஏற்படுகிறது.

இதையும் படிங்க:  "இந்த" நாளில் ஒருபோதும் துளசி இலைகளை பறிக்காதீங்க...சில விபரீதங்களை சந்திக்கலாம்..!!

துடைப்பம்: துளசி செடிகாரியில் விளக்குமாறு வைப்பது நல்லதல்ல. இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் நிதி பிரச்சனைகள் மற்றும் சிரமங்கள் ஏற்பட தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குப்பைத்தொட்டி: குப்பைத் தொட்டியை துளசி அருகில் வைக்க கூடாது. அப்படி செய்வதால் விஷ்ணுவுக்கு கோபம் வரும். துளசிக்கு அருகில் குப்பைத்தொட்டி வைப்பவர்கள் அவர்கள் லட்சுமியால் ஆசீர்வதிக்கப்பட மாட்டார்கள்.

Latest Videos

click me!