துளசி செடியையை வழிபட்டால் செல்வம், செழிப்பு கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே, இந்த செடியை தினமும் வணங்கி அதற்கு காணிக்கை செலுத்துவார்கள். இருப்பினும் துளசி செடிக்கு காணிக்கை செலுத்தும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும். அதாவது துளசி செடிக்கு சிலவற்றை காணிக்கையாக கொடுக்கக் கூடாது அல்லது துளசி செடிக்கு அருகில் அவற்றை வைக்கக்கூடாது. இல்லையெனில் வீட்டில் சண்டை சச்சரவுகள், நிதி நெருக்கடி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பதிவில் துளசி செடிக்கு கணிக்கையாக எவற்றை படைக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
25
சிவ வழிபாட்டு பொருட்கள் :
வில்வ இலைகள், பாரிஜாதம் மலர்கள் போன்ற சிவ வழிபாட்டில் பயன்படுத்தும் எந்தவொரு பொருட்களையும் துளசி செடிக்கு காணிக்கையாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் சிவன் துளசியின் கணவரை கொன்றதால் துளசிக்கும் சிவனுக்கும் இடையே பகை இருக்கிறது. எனவே சிவனுக்கு காணிக்கையாக கொடுக்கும் பொருட்களை ஒருபோதும் துளசி செடிக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டாம்.
35
கரும்பு சாறு :
துளசி செடிக்கு ஒருபோதும் கரும்பு சாறு படைக்கக்கூடாது. இல்லையெனில் பல பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
தெரிஞ்சா தெரியாமலே கூட துளசிக்கு பால் காணிக்கையாக கொடுப்பது அசுபமாக கருதப்படுகிறது. பலர் துளசி செடியின் மீது பால் கலந்த தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் செடி காய்ந்து போகும். இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரித்து, குடும்ப தகராறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
55
கருப்பு எள் :
துளசி செடிக்கு ஒருபோதும் கருப்பு எள்ளை படைக்கக்கூடாது. இது அனைத்து வகையான தீய சக்தியையும் ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. துளசி செடிக்கு கருப்பு எள் மட்டுமல்ல, கருப்பு நிற எந்தவொரு பொருட்களையும் படைக்க வேண்டாம். அது அசுபமாகும்.