சாப்பாட்டுல கவனம் தேவை: வீடு மட்டும் சுத்தமா இருந்தா பத்தாது, உடம்பும் சுத்தமா இருக்கணும். லட்சுமி பூஜை நேரத்துல சாப்பாட்டுலயும் ரொம்ப கவனம் தேவை. எந்த காரணத்திற்காகவும் அசைவம் சாப்பிடவோ, மது குடிக்கவோ கூடாது. விரதம் இருக்குறவங்க வெங்காயம், பூண்டு சேர்க்கக் கூடாது. முடிஞ்ச வரைக்கும் வெளியில விக்கிற உணவுகளை சாப்பிடாதீங்க.
பூஜை நேரத்துல இந்த துணியை போடாதீங்க: லட்சுமி செல்வத்தின் தெய்வம். அவங்களை பூஜை செய்யும்போது நம்ம ஆடைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கு. பூஜை செய்யும்போது கிழிந்த துணியை போடாதீங்க. கிழிந்த துணி வறுமையின் அடையாளம். அதேபோல கறுப்பு கலர் துணியும் உடுத்தக் கூடாது.
வீட்ல வெளிச்சம் இருக்கட்டும்: தீபங்களின் பண்டிகை தீபாவளி. அன்னைக்கு வீடு முழுக்க எப்பவும் வெளிச்சம் இருக்குற மாதிரி பார்த்துக்கணும். தீபாவளி சாயங்காலம் வீட்டுக்கு வர்ற லட்சுமி தேவி எல்லாரையும் ஆசீர்வதிப்பாங்க. ஆனா வீட்ல இருட்டு இருந்தா அவங்க உள்ளே வர மாட்டாங்க. அதனால ராத்திரி முழுவதும் விளக்கு எரியுற மாதிரி பார்த்துக்கோங்க.
Diwali Narakasuran story : தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது? நரகாசுரனை கிருஷ்ணர், சத்யபாமா வதம் செய்த கதை தெரியுமா?