பரணி தீபம்: பரணி தீபம் என்பது, காலவேளையில் பரணி நட்சத்திரம் இருக்கும் நாளைப் பின்பற்றி ஏற்றப்படுவதாகும். டிசம்பர் 2 ஆம் தேதி சாயங்காலத்திற்குப் பிறகுதான் பரணி நட்சத்திரம் வருகிறது என்பதால் பரணி தீபம் என்பது (டிசம்பர் 3, 2025) காலையில் ஏற்றப்பட வேண்டும்.
திருவண்ணாமலைத் தீபம் (அண்ணாமலையார் தீபம்): திருவண்ணாமலையைப் பொறுத்தவரை, அங்கு கிருத்திகை நட்சத்திரத்தைப் பிரதானமாகக் கொண்டுதான் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது. உற்சவமே தீபத்தை மையமாகக் கொண்டது என்பதால், அஸ்தமன காலங்களில் (மாலை நேரத்தில்) என்றைக்குக் கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறதோ, அன்றுதான் அண்ணாமலையார் தீபத்தைப் பின்பற்றுவது வழக்கம். நாளை (டிசம்பர் 3) சாயங்காலம் கிருத்திகை நட்சத்திரம் வருவதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபம் என்பது (டிசம்பர் 3, 2025) மாலையில் ஏற்றப்பட வேண்டும்.
சர்வ ஆலய தீபம்: சர்வ ஆலய தீபம் என்பது மற்ற கோவில்கள் அனைத்திலும் ஏற்றப்படுவதாகும். இது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியைப் பின்பற்றிப் பின்பற்றப்படுவதாகும். எனவே, சர்வ ஆலய தீபம் என்பது டிசம்பர் 4, 2025 அன்று ஏற்றப்பட வேண்டும்.