Chanakya Niti : பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் தந்தையா நீங்க.! மறந்து கூட இந்த 5 தவறுகளை செய்யாதீங்க.! சாணக்கியர் அறிவுரை.!

Published : Apr 20, 2026, 02:24 PM IST

Chanakya Advice on Father Daughter Relationships : இந்திய வரலாற்றில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த சாணக்கியர் மகள்களை வைத்திருக்கும் தந்தைகள் மறந்து கூட செய்யக்கூடாத தவறுகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
தந்தைகளுக்கு சாணக்கியர் கூறும் அறிவுரை - Chanakya Advice on Father Daughter Relationships

இந்திய அரசியல் வரலாற்றில் சாணக்கியர் மிகப் பெரும் அறிஞராகத் திகழ்ந்தார். அரசியல் மட்டுமல்லாமல் வாழ்க்கை குறித்த நெறிமுறைகளையும் வகுத்துள்ளார். அவரது ‘நீதி சாஸ்திரம்’ நூலில் மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பற்றி ஆழமான அறிவுரைகளை வழங்குகிறார். 

இதில் குடும்ப உறவுகள், கணவன் மனைவிக்கு இடையேயான பந்தம், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான பொறுப்புகள் குறித்து முக்கியமான குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மகள்களை வைத்திருக்கும் தந்தைகள் சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

27
1.பிறர் முன் அவமதிக்கக்கூடாது

சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு தந்தையானவர் தனது மகளைப் பற்றி மற்றவர்கள் முன்னிலையில் அவமதிக்கும் வகையிலோ அல்லது இழிவுபடுத்தும் வகையிலோ பேசக்கூடாது. மகளின் மரியாதையை காப்பதே தந்தையின் முதல் கடமை என்று சாணக்கியர் கூறுகிறார். தந்தையின் வார்த்தைகள் மகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வளவு சிறிய தவறாக இருந்தாலும் மகளைப் பற்றி எதிர்மறையாக பேசுவது அவளது தன்னம்பிக்கையையும், மதிப்பையும் குறைத்து விடும். எடுத்துக்காட்டாக ஒரு ஒரு தந்தை தனது மகளின் தோல்விகள் அல்லது குறைகளை விமர்சித்தால் அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். எனவே எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையிலேயே பேச வேண்டும்.

37
2.தனிப்பட்ட முடிவகளில் குறுக்கீடு செய்யக்கூடாது

ஒரு தந்தை தன் மகள் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளை மதித்து நடக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். திருமணம், தொழில், கல்வி போன்ற முடிவுகளில் ஆலோசனை வழங்குவது ஒரு தந்தையின் கடமையாக இருந்தாலும், மகளின் விருப்பங்களை மீறி தனது விருப்பங்களை திணிப்பது தவறு என்று சாணக்கியர் கூறுகிறார். மகளின் தனித்தன்மையையும் அவளது ஆசைகளையும் புரிந்து கொண்டு முடிவெடுக்க அவளுக்கு உரிய சுதந்திரத்தை தந்தை வழங்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். எடுத்துக்காட்டாக ஒரு மகள் தனக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுக்கும் பொழுது தந்தை அதில் குறுக்கீடு செய்யாமல், தனது விருப்பத்தை திணிக்காமல் அவளது ஆர்வத்தையும், திறமையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

47
3. பாலின பாகுபாடு காட்டுதல் கூடாது

குடும்ப உறுப்பினர்களிடையே பாகுபாடு காட்டுதல் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். தந்தையானவர் மகன்களிடம் காட்டும் அதே பாசத்தையும், மரியாதையையும் மகள்களுக்கு சமமாக கொடுக்க வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். பாலின அடிப்படையில் பாகுபாடு காண்பது மிகப் பெரிய தவறு என்றும், மகனுக்கு வழங்கப்படும் கல்வி, அன்பு, கவனிப்பு, வாய்ப்புகள் அனைத்தும் மகள்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்றும், மகளை புறக்கணிப்பது அல்லது இரண்டாம் பட்சமாக நடத்துவது மிகப்பெரிய பாவம் என்றும் சாணக்கியர் கூறுகிறார். எடுத்துக்காட்டாக தந்தை தன் மகனின் உயர் கல்விக்கு முன்னுரிமை அளித்து, மகளுக்கு திருமணத்தை மட்டுமே முக்கியமாக கருதினால் அது மிகப்பெரிய பாவம் என்று சாணக்கியர் தெளிவுபடுத்துகிறார்.

57
4.பாதுகாப்பை உறுதி செய்தல் தலையாய கடமை

சாணக்கியர் தனது நீதியில் மகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தந்தையின் முதன்மையான பொறுப்பு என்று கூறியிருக்கிறார். மகளின் உடல், மனம் மற்றும் உணர்ச்சி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு அவளை கண் இமை போல காக்க வேண்டியது முக்கியம் என்றும் கூறுகிறார். எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையும் தனியாக விடுதல் கூடாது, மகளின் சுற்றுப்புறத்தை பற்றி எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக மகள் பயணம் செய்யும்பொழுது அல்லது புதிய இடங்களுக்கு செல்லும் பொழுது தேவையான ஆலோசனைகளையும், பாதுகாப்பு உணர்வுகளையும் வழங்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

67
5.திருமணத்தில் அவசர முடிவுகள் கூடாது

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எடுக்கப்படும் முக்கியமான முடிவு. இந்த விஷயத்தில் தந்தை அவசரப்படுதல் கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். மணமகனின் குடும்பம், அவரது குடும்பப் பின்னணி, பொருத்தம், மகளின் விருப்பம் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து எதிர்கால நலனை முதன்மையாகக் கருதி அதன் பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். சமூக அழுத்தத்தின் காரணமாக முடிவெடுப்பது, மகளின் வயது காரணமாக முடிவெடுப்பது போன்றவை அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கலாம். எனவே மகளின் மகிழ்ச்சியை முதன்மையாக வைத்து முடிவெடுக்க வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

77
ஒவ்வொரு தந்தையும் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஒரு தந்தையின் பொறுப்பு என்பது மகளை வளர்ப்பதோடு நின்று விடாமல், அவளை தன்னம்பிக்கை மிக்க மரியாதைக்குரிய பெண்ணாக உருவாக்குவதிலும் உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். மகளை மரியாதையாக நடத்துவது, அவளது உரிமைகளை பாதுகாப்பது, சமமான வாய்ப்புகளை வழங்குவது, பாதுகாப்பை உறுதி செய்வது, அன்பையும், ஆதரவையும் வழங்குவது ஆகியவற்றை முக்கிய கடமைகளாக சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் இந்த அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு தந்தை தன் மகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒரு புரட்சிகரமான பெண்ணையும் உருவாக்க முடியும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories