Budhan Parihara Sthalam : புதன் பகவான் கல்விக்கு அதிபதி. பேச்சாற்றல் குறைபாடு உள்ளவர்கள், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் இத்தலத்து புதன் பகவானை வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நவகிரகத்தில் புதன் ஒரு கிரகமாக உள்ளது இந்த புதன்கிரகத்திற்கு ஏதேனும் பிரச்சனை கஷ்டம் என்று இருந்தால் இந்த திருவெண்காடு சுவேதாரண்யசுவரர் கோயிலுக்கு சென்று வந்தால் விரைவில் நல்லது நடக்கும் என்று கூறப்படுகிறது இந்த கோயிலை புதன் கோயில் என்றும் சிலர் அழைப்பார்கள். மிகவும் பழமையான கோயில் என்று கூறப்படுகிறது இதன் முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
Budhan Parihara Sthalam Thiruvenkadu
நவகிரகங்களில் புதனுக்குரிய ஒரு கோயிலாக திருவெண்காடு சுவே தாரண்யேஸ்வரர் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில் ஒரு பழமையான சிவன் கோயில் என்று கூறப்படுகிறது.இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது. கோயில் 11வது தேவாரத் தளமாகும் இங்கு அம்மனின் 51 பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் . இங்கு மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.
35
புதன் பரிகார தலம்:
வடக்கே உள்ள காசிக்கு இது நிகரான ஸ்தலமாக கூறப்படுகிறது. இந்தக் கோயில் புதனுக்குரிய கோயிலாகவும் கருதப்படுகிறது. இத்த தல இறைவனான சுவே தாரண்யேஸ்வரரை வணங்கிய பிறகுதான் புதன் அலி தோஷம் நீங்கி நவகிரகங்களில் ஒருவரானார் என்று வரலாற்றில் கூறப்படுகிறது. அத்தகைய புதன் கிரகத்தில் இருக்கும் பிரச்சனைகளும் நீங்கி புதன் மிக வலுவு பெறும் என்றும் கூறப்படுகிறது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது இக்கோயிலில் ருத்ரபாதம் வடவால் விருச்சத்தின் கீழ் உள்ளது. பழமையான சிறப்புமிக்க கோவிலாக இக்கோயில் கருதப்படுகிறது.
45
புதன் பகவான்:
சந்திரனின் மைந்தன் தான் புதன் பகவான் என்று கூறப்படுகிறது. புத்தியிலிருந்து வந்தது தான் புதன் என்றும் கூறப்படுகிறது. புதன் கிரகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி கூர்மையாகவும் அதிகமாக புத்தியை உபயோகத்தில் வல்லமையாகவும் இருப்பார்கள் அதனால் இவர்களை புத்தி காரணம் என்றும் ஜோதிடர்கள் கூறுவார்கள் அத்தகைய அறிவு மிக்கவர்கள் இந்த புதன். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சரியாக இருந்தால்தான் அவருக்கு தொழில் கல்வி செல்வம் குடும்ப வாழ்க்கை என்று அனைத்திலும் முன்னேறலாம் என்றும் கூறப்படுகிறது இதில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் கூட அவர்களால் சரியான பாதையில் செல்ல முடியாது என்றும் கூறுவார்கள் ஆகையால் இந்த திருவெண்காடு கோயிலுக்கு வந்து சென்றாள் புதனில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது .
55
பலன்கள்:
புதன் பிரச்சினையை குறைக்க புதன் பகவானுக்கு பச்சை வாஸ்திரம் சூட்டப்பட்டு பாசிப்பருப்பு பொடி சாதம் செய்து படைத்தால் விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது இவரை வணங்கினால் கல்வி செல்வம் தொழில் வாழ்க்கை என்று அனைத்திலும் சிறப்பாக செயல்படும் என்றும் கூறப்படுகிறது இங்கு வந்து சென்றால் நம் தேசங்கள் விரைவில் நிங்கும் என்றும் கூறப்படுகிறது.