• முதலில் சுத்தமான வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
• அதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.
• அதன் மேல் சிறிய அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.
• பஞ்சுத் திரியை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
• தீபம் ஏற்றிய பிறகு லட்சுமி, முருகன் அல்லது குலதெய்வத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யலாம்.
எந்த நாளில் ஏற்றுவது சிறப்பு?
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெற்றிழை தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக:
• வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
• செவ்வாய்க்கிழமை ஏற்றினால் தடைகள் நீங்கி துணிச்சல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
• அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் பலர் இந்த வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.