Bathing Naked In Tamil
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் சாஸ்திரங்கள் விளக்கங்கள் வைத்துள்ளது. சாஸ்திரங்களின்படி, மனிதர்களுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவை மனித குலத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வீடு கட்டுவதற்கான வாஸ்து தொடங்கி வீடு குடியேறும் முன்பு செய்ய வேண்டிய பூஜைகள் வரை சாஸ்திரங்களில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அர்த்தங்களும், காரணங்களும் உள்ளன. அந்த வகையில் குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் குளிப்பது சரியா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: குளிக்கும் நீரில் "இந்த" ஒரு பொருளை சேர்த்து குளியுங்கள்..தோஷங்கள் பல நீங்கும்!
Bathing Naked In Tamil
பழங்காலங்களில் இன்றைய காலகட்டத்தை போல ஒவ்வொரு வீடுகளிலும் குளியலறை இருக்காது. அரண்மனைகளில் தான் குளிப்பதற்கு என்று தனி இடம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை தான் குளிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு ஆண்கள் கோமணம் கட்டியும், பெண்கள் இடை கட்டியும் குளிப்பார்கள்.
அந்த காலத்தில் குளிக்கும் இடத்தில் நீராடி கொண்டிருக்கும்போதே பூச்சிகள் தீண்டிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக ஆடைகளை அணிந்தபடி குளிக்க சொல்வார்கள். ஏனென்றால் நிர்வாணமாக குளித்தால் ஆற்றுக்குள் ஏதேனும் விஷமுள்ள பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக கரைக்கு ஓடி வர முடியாது. இதன் காரணமாக ஆடைகளை உடுத்த பெரியோர் அறிவுறுத்துவார்கள். பொதுவாக நல்லது சொல்லும்போது மக்கள் அதனை கண்டு கொள்வதில்லை. இது ஒருபுறம் இருக்க சாஸ்திர ரீதியாகவும் ஆடை அணிந்து குளிப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
Bathing Naked In Tamil
சாஸ்திரங்களின்படி, ஒருவர் நிர்வாணமாக குளிப்பது கொடும் பாவமாகும். மனிதன் நிர்வாணமாக குளிப்பதை கடவுள்களே விரும்புவதில்லை. மகாலட்சுமி, வர்ண பகவான் இருவருக்கும் இதில் விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. நிர்வாணமாக குளியல் மேற்கொள்பவர்களுக்கு உள்ளத்தில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனால் மனதளவில் சிலர் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. குடும்பத்தில் நிம்மதி இருக்காது. மேலும், நிர்வாணமாக குளிப்பவர்களுக்கு தோஷம் ஏற்படும் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நீங்கள் புண்ணிய நதிகளில் நீராடினால் அப்போது முழு ஆடைகளுடனே நீராட வேண்டும். ஆறு, குளம், ஏரி ஆகியவற்றில் குளிக்க சென்றாலும் குறைந்தபட்ச ஆடைகளுடன் குளிப்பது நல்லது. வீட்டிலும் நிர்வாணமாக குளிப்பதை தவிர்த்து துண்டு கட்டி குளிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் எந்த ஆடைகளுமே அணியாமல் குளித்ததால் அது தோஷத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
Bathing Naked In Tamil
மிதமான சூடு அல்லது மிதமான குளிர் கொண்ட நீரில் தான் குளிக்க வேண்டும் அதிகமான வெப்பம் அல்லது அதிகமான குளிர் இருக்கும் நீரில் குளிக்க கூடாது. முதலில் தலையில் தண்ணீரை ஊற்றக்கூடாது. பாதத்தில் தான் தண்ணீரை ஊற்ற வேண்டும். இதன் பிறகு தான் உடலுக்கு தண்ணீர் ஊற்றி தலையை நனைக்க வேண்டும் இப்படி குளித்தால் தான் உடலில் உள்ள வெப்பம் தணியும். இல்லையென்றால் நீங்கள் குளித்தும் எந்த பயனும் இல்லை உடலில் வெப்பம் தணியாமல் மற்ற உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
எப்படி குளித்தால் நன்மை பெருகும்?
தோஷங்கள் நீங்க நீங்கள் குளிக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பு, மஞ்சள், சில வேப்பிலைகளை கிள்ளி போட்டு குளிப்பதால் தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. இதனால் சுறுசுறுப்பாக இயங்க முடியுமாம். உங்களை சுற்றி தொந்தரவு செய்யும் கெட்ட சக்திகள், திருஷ்டி போன்றவை உங்களை விட்டு அகன்று போகும். வீட்டை விட்டு வெளியே செல்லும் ஆண்கள் வீட்டிற்கு வந்ததும் குளிப்பது தான் நல்லது; கை கால் மட்டும் கழுவுவது எந்த பயனையும் தராது.
Bathing Naked In Tamil
குழந்தைகளை எப்படி குளிப்பாட்டலாம்?
உங்கள் வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தைகளை வீட்டிற்குள் நிர்வாணமாக குளிக்க வைக்கலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே வைத்து குளிக்க வைக்கும் போது ஆடைகள் இல்லாமல் குளிக்க வைப்பது தவறு. இதனால் கண் திருஷ்டி விழலாம். ஆடைகளுடனே குளிக்க வையுங்கள். ஆண்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பெண்கள் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற சாஸ்திரங்களை நம்பி அவர்கள் வகுத்த வழியில் நடப்பதே சாலச் சிறந்தது. இதனால் நம்முடைய வாழ்க்கையில் எந்த கெட்டதும் நடக்காமல் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
இதையும் படிங்க: குளிக்கும் தண்ணீரில் இவற்றை கலந்து குளிங்க.. அதிஷ்டத்தின் கதவு திறக்கும்! பணம் மழை பொழியும்!