விழாக்கோலம் கொண்ட அயோத்தி.. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோவில் - Exclusive புகைப்படங்கள் இதோ!

First Published | Jan 21, 2024, 7:07 PM IST

Exclusive Ayodhya Ram Temple Pictures : உலகெங்கும் உள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நாள் நாளை வரவிருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக அயோத்தியே தயார் நிலையில் உள்ளது.

Ram temple Opening

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை திறந்து வைக்கிறார். இதற்காக அவர் பிரத்தியேக விரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில் திறப்பு.. 10 லட்சம் அகல் விளக்குகளால் ஒளிரப்போகும் அயோத்தி - வீடுகளில் ஏற்றப்படும் 'ராம் ஜோதி'!

Exclusive ramar temple pics

பழங்கால கட்டடக் கலையை புகுத்தி இந்த ராமர் கோவில் முழுக்க முழுக்க கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ராமர் கோவிலின் சில பிரேத்தியேக புகைப்படங்கள் நமது ஏசியாநெட் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

Tap to resize

Ramar Temple

நாளை காலை ராமர் கோவில் திறக்கப்படும் நேரத்தில் ஸ்ரீ ராமருடைய திருஉருவ சிலை கோவிலில் நிறுவப்பட உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Ram Temple Pics

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உள்ளிட்ட  பல்வேறு முன்னணி நடிகர்கள் இன்று அயோத்தி புறப்பட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ram Temple in Ayodhya

அயோத்தியில் உள்ள விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் மக்கள் பெருந்திரளாக குழுமி வருகின்றனர். ராமர் கோவிலை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகின்றது.

Ram Temple Photos

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு சுமார் 10 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தி நகரமே ஒளிரூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது கடைவீதிகளும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளது.

Ram Temple Ceremony

ஆயிரத்தில் உள்ள வீடுகளிலும் தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் ராம தீபம் ஏற்ற அரசு மக்களை ஊக்குவித்து வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

Ram Temple Inauguration

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக இது கருதப்படுகிறது.

Ayodhya Ram Temple

சில மணி நேரங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அர்ஜுன் அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், பிரதமர் மோடி அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய குழுவினருக்கும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Ram temple

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக அங்கு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியர்களின் கனவு நிறைவேறியது.. மாண்புமிகு பிரதமருக்கு நன்றி.. ராமர் கோவில் திறப்பு - வாழ்த்து சொன்ன அர்ஜுன்!

Latest Videos

click me!