இந்து மதத்தில், செவ்வாய் கிழமை அனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமையில் பிறந்தவரான அனுமனை வழிபடுவதன் மூலம், ஒருவருக்கு எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய் கிழமையே சில வேலைகள் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.
செவ்வாய்கிழமையில் கண்ணாடி சம்பந்தமான பொருட்களை வாங்கக்கூடாது. யாருக்கும் கண்ணாடி பரிசுகளை வழங்காதீர்கள் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட எதையும் வீட்டிற்கு கொண்டு வர அனுமதிக்காதீர்கள். இவ்வாறு செய்வதால் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க் கிழமையன்று நீங்கள் கருப்பு நிற ஆடைகளை வாங்கவே கூடாது, அவற்றை அணியாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். செவ்வாய்கிழமை அன்று சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமையன்று சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்தால் மங்கள தோஷம் நீங்கி ஆரோக்கியம் பேணப்படும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க் கிழமையன்று, பாலில் செய்யப்பட்ட பொருட்களையோ, இனிப்பு வகைகளையோ வாங்கவோ, யாருக்கும் தானம் செய்யவோ கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் அமைதியின்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. இந்த இனிப்புகளை அனுமானுக்கு மட்டும் வழங்கி பிரசாதத்தை நீங்களே சாப்பிடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
செவ்வாய்கிழமையன்று இறைச்சி அல்லது மதுவைத் தொடக்கூடாது. இந்த நாளில் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை வாங்கினால் பண இழப்பு நிச்சயம். கூடுதலாக, ஒரு நபர் சில நோய்களால் பாதிக்கப்படலாம். செவ்வாய்கிழமையன்று, பல வீடுகளில், வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதில்லை அல்லது தாமச உணவு சாப்பிடுவதில்லை.