அறுபடை வீடுகளும் அதன் அபூர்வ பலன்களும்! நீங்கள் தரிசிக்க வேண்டிய முருகனின் புனிதத் தலங்கள்!

Published : Jan 23, 2026, 10:26 PM IST

First Padai Veedu Thiruparankundram Sri Subramaniyaswamy : முருகப்பெருமானின் ஆறு படைவீடுகள் எங்குள்ளன? ஒவ்வொரு படைவீட்டின் பின்னணி மற்றும் அங்கு வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
14
அறுபடை வீடுகளும் அதன் அபூர்வ பலன்களும்!

First Padai Veedu Thiruparankundram Sri Subramaniyaswamy : முருகப்பெருமானுக்கு அவர் அமர்ந்திருக்கும் கோயில்கள் எத்தனையோ இருந்தாலும் ஆனால் அவருக்கென்று உரியது அந்த அறுபடை கோயில் தான். முருகன் தனக்கென்று ஒரு தனி சிறப்பையும் அவதாரத்தையும் இந்த கோயிலில் அதிகமாகவே கொண்டுள்ளார். அதனால் தான் இவருக்கு இந்த அறுபடை வீடு என்று பெயர் வந்தது. முருகனின் அறுபடை வீடுகளை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
நீங்கள் தரிசிக்க வேண்டிய முருகனின் புனிதத் தலங்கள்!

அறுபடை வீட்டின் அதிபதி: தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும்அனைவருக்கும் தெரியும். இந்த அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரரும் முருகன் தான். முருகன் என்றாலே குன்றியிருக் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான். என்ற பழமொழிக்கு ஏற்ப முருகன் மழையிலேயே அமர்ந்திருக்கிறார். அப்பன் சிவ னை விட அதிக அளவில் முருகற்கு பக்தர்கள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளும் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களை குறிப்பதாகும்.

34
ஆறுபடை வீடு

ஆறுபடை வீடு என்றால் என்ன? சூரபத்மனை அழிக்கப் போர்க்கோலம் பூண்டு, தனது படைகளுடன் தங்கியிருந்த ஆறு இடங்களைக் குறிக்கிறது. இது 'ஆற்றுப்படை வீடு' என்பதன் மருவி, முருகனின் ஆறுபடை வீடுகள் கருதப்படுகிறது. இந்த ஆறு தலங்களும் மனித உடலின் ஆறு ஆதாரங்களையும் மூலாதாரம் முதல் ஆக்கினை வரை குறிக்கின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை.

44
முதல் படை வீடு-திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் தான் முருகனின் முதல் படை வீடு என்று கூறப்படுகிறது. முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நடந்த போரில் வெற்றி பெற்ற மறுநாள் முடிந்து தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரனின் மகள் தெய்வானையை இந்த தளத்தில் தான் திருமணம் செய்து கொண்டதாக புராணங்களில் சொல்லப்படுகின்றன சிவபெருமான் ட்ரம் என்னும் மலை வடிவாக காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம் ஆகும்.

பலன்கள்: திருப்பரங்குன்றத்தில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்ததால் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் திருமணத்தடை நீங்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இங்கு வேண்டிக்கொண்ட சிலர் இக்கோயிலையே திருமணம் செய்து கொள்வார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories