Vastu tips: வீட்டில் இந்த திசையில் ஏர் கூலரை வச்சு பாருங்க!! வீடு செல்வங்களால் நிரம்பி வழியும்.. !!

First Published May 29, 2023, 7:42 PM IST

கோடைகாலத்தில் பெரும்பாலானோர் ஏர் கூலர் பயன்படுத்துவார்கள். ஆனால் அதை சரியான திசையில் வைக்காவிட்டால் வாஸ்து பிரச்சனைகள் ஏற்படலாம். 

வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்துவுடன் ஆழமான தொடர்பு உண்டு. வீட்டில் உள்ள பொருள்களை வாஸ்து விதிப்படி வைத்திருந்தால், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவும். அந்த வகையில் வீட்டில் குளிர்ச்சியை கொண்டு வரும் குளிரூட்டி (Air cooler) வைப்பதற்கான சரியான திசையை இங்கு காணலாம்.  

  நிறம்: 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வெள்ளை வண்ண குளிரூட்டியை (Air cooler) வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தவிர, வேறு ஏதாவது நிறத்தை வைக்க விரும்பினால், கிரீம் அல்லது சில்வர் நிறத்தை தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டில் ஏற்கனவே வேடு வண்ணங்களில் ஏர் கூலர் இருந்தால், இந்த வண்ணங்களில் மாற்றலாம்.

குறிப்பாக நீலம், சிவப்பு மற்றும் சாம்பல் நிற ஏர் கூலரை வீட்டில் வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் வரும். வீட்டில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். இத்துடன் வாஸ்து தோஷமும் இருப்பதாக தெரிகிறது. இதனால் பொருளாதார நிலை மோசமாகும். 

சரியான திசை: 

வாஸ்து படி, ஏர் கூலர் சரியான திசையில் இருந்தால், வீட்டில் பணப் பிரச்சனைகள் நீங்கும். இதனால் வீட்டின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நிலைத்திருக்க செய்யலாம். ஆனால் ஏர் கூலரை தவறான திசையில் வைத்தால் வீட்டில் பண இழப்பும், மோசமான விளைவுகளும் ஏற்படும். 

முன்னேற்றம்: 

வாழ்க்கையில், தொழிலில் முன்னேற்றம் காண ஏர்கூலரை எப்போதும் வடகிழக்கு திசையில் கோணத்தில் வைக்க வேண்டும். இந்த திசையில் வைப்பதால் வீடு குளிர்ச்சியாக இருப்பதோடு வீட்டில் செழிப்பையும் கொண்டு வரும். வடமேற்கு திசையில் கூட வைக்கலாம். தென்மேற்கு திசையில் வைக்கவேகூடாது.  

click me!