
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால், மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் இது. இப்படத்தில் மானசா சௌத்திரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வஸ்டிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் கே. விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இன்வஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. 800 திரைகளில் இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதல் பாதி: நேரடியா கதைக்குள்ள வந்த விதம் செம்ம. செல்வராகவன் தான் கீ ரோல். அவரோட கேரக்டரை வடிவமைச்ச விதம் சூப்பர். விஷ்ணுவிஷால் ரோலுக்கு கச்சிதம். ஷ்ரத்தா அழகு + நடிப்பு. அவங்க ரோல் படம் முழுக்க வர்ற மாதிரி அமைச்சு இருக்காங்க போல... ஒரு பாட்டு தவிர அடுத்து என்ன நடக்கும்னு எதிர்பார்ப்போட தான் வச்சுருக்கு கதைக்களம். டிவிஸ்ட்டுகள் நல்லா இருக்கு.
இரண்டாம் பாதி: முதல் பாதியை தொடர்ந்து வரும் இரண்டாம் பாதியில் கொலைகள் எதற்காக நடக்குதுன்னு ஒரு குழப்பமாகவே நடக்க. அந்த கொலைகள் நடக்கும் விதமும், அதில் வரும் டிவிஸ்ட்டுகளும் யாரும் யூகிக்க முடியாதது. கொலைகளையும், அந்த கொலையாளிகளையும் இணைத்த விதம், அதன் மையக்கருவுடன் இணையும் விதம் செம்மையா இருந்தது. படம் பேசும் கருத்தும் ஆழமானது, சிந்திக்க வேண்டியதும் கூட. கிளைமேக்ஸில் விஷ்ணு விஷால் பேசும் ஒரு வசனம் செம்மையா இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
ஆர்யன் ஒரு ஷார்ப் ஆன, உணர்ச்சிபூர்வமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் வித்தியாசமான கிரைம் திரில்லர். வலுவான எழுத்து மற்றும் சக்திவாய்ந்த நடிப்பால் இப்படம் தனித்து நிற்கிறது. விஷ்ணு விஷால் போலீஸ்காரராக சிறப்பாக நடித்துள்ளார், அதே நேரத்தில் செல்வராகவன் ஒவ்வொரு காட்சியையும் தனது புத்திசாலித்தனத்தால் சொந்தமாக்கியுள்ளார். ஸ்பாய்லர்கள் கசிவதற்கு முன்பு இதை தியேட்டரில் பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஆர்யன் படம் பார்த்த மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், இது போலீஸ் கதைகளில் மாறுபட்டு இருப்பதாகவும், திரில்லர் கதைகளில் சற்று வித்தியாசமானதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொலைக்கான காரணம் புதுமையானது என்றும், கிளைமாக்ஸ் எதிர்பாராதது எனவும் பதிவிட்டுள்ளதோடு விஷ்ணுவிஷால், செல்வராகவனின் நடிப்பு நச்சுனு இருப்பதாக பாராட்டி இருக்கிறார்.
ஆர்யன், கெஸ் பண்ணவே முடியாத திரைக்கதை. உண்மையாவே இந்த படத்தோட கதை ஒரு மாதிரி விசித்திரமா இருந்துச்சு. ஆனா கிளைமாக்ஸ்ல ஒரு நல்ல மெசேஜ் அதே நேரத்தில் அதற்காக தவறு செய்வதை நியாயப்படுத்தாமல் எதார்தத்தின் வெளிப்பாடாய் படத்தை நிறைவு செய்தது சிறப்பு. ராட்சசன் அளவுக்கு எதிர்பார்க்காமல் படத்தை பாருங்கள் நிச்சயம் உங்களை திருப்திபடுத்தும் என பதிவிட்டுள்ளார்.