Kara First Review : வந்தாச்சு ‘கர’ முதல் விமர்சனம்! தனுஷ் கரசாமியாக கலக்கினாரா? சொதப்பினாரா?

Published : Apr 29, 2026, 12:31 PM IST

தனுஷ் நடிப்பில் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கர'. இந்தப் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி, படத்தின் ஹைலைட்ஸ் என்ன என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.

PREV
15
Kara Movie First Review

தனுஷ் கடைசியாக 'இட்லி கடை' படத்தில் நடித்திருந்தார். அப்படம் பெரியளவில் ஹிட் அடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது 'கர' படத்தில் மமிதா பைஜுவுடன் ஜோடியாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம் என பல அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். கர திரைப்படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகிறது.

25
தனுஷின் கர

படம் சென்சார் செய்யப்பட்டு 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் நீளம் 2 மணிநேரம் 41 நிமிடங்கள். ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து எப்படி வெளியே வந்தான் என்பதுதான் கதை என்று தனுஷ் கூறியுள்ளார். தனுஷ், கரசாமி என்ற திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்தில் நடக்கும் இந்தக் கதையில், திருட்டை விட்டுவிட்டு வரும் அவர், சில கரணங்களால் மீண்டும் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். 1991ம் ஆண்டு எரிபொருள் பற்றாக்குறை காலத்தில், தன் வாழ்க்கைக்கும் பாவத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஒருவரின் கதை இது என்று படக்குழு கூறுகிறது.

35
கர முதல் விமர்சனம்

இப்படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் பெயர் நீண்ட காலத்திற்குப் பேசப்படும் என தனுஷ் தெரிவித்துள்ளார். இது ஒரு 'ஸ்லோ-பர்ன் த்ரில்லர்' என்றும், ஆக்‌ஷன் பட்டையைக் கிளப்பும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியுள்ளார். 90-ஸ் பின்னணியில் படம் விறுவிறுப்பாக இருக்கும் என போலீஸ் அதிகரியாக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடு தெரிவித்துள்ளார்.

இது உணர்வுபூர்வமாக கனெக்ட் ஆகும் படம் என ஹீரோயின் மமிதா பைஜு கூறியுள்ளார். தனுஷின் மனைவியாக வரும் அவரைச் சுற்றிதான் கதை நகர்கிறதாம். இது ஒரு ஹாலிவுட் பாணியிலான கிராமத்து ஹீஸ்ட் த்ரில்லர் என இயக்குநர் கூறுகிறார். ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த ஹைப் வரவில்லை. புரமோஷன் பலவீனமாக உள்ளது. படம் மெதுவாக நகரும் என்பதும் ஒரு மைனஸாக இருக்கலாம். ஆனால், கதை வலுவாக இருக்கும் என்கிறார்கள்.

45
கர ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?

கர திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தாலும் அதற்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாகவே உள்ளது. இதனால் இப்படத்திற்கு ஓப்பனிங் மிகப்பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் பின்னர் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தால் மட்டுமே ஹிட் அடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஒரு தமிழ் படம் கூட 100 கோடி வசூலை எட்டவில்லை. இந்த சாதனையை எட்டிப் பிடிக்கும் முதல் தமிழ் படமாக கர இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

55
தனுஷ் சம்பளம்

கர திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அவரது கெரியரில் அதிக சம்பளம் வாங்கிய படம் இதுவாகும். இதுதவிர வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார் தனுஷ். அதில் ஒரு படம் வெற்றிமாறனின் வட சென்னை 2 என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories