ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி கேர்ள் பிரெண்ட்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடிக்கும் Women Centric திரைப்படம் 'தி கேர்ள் பிரெண்ட்'. இப்படத்தை நடிகரும், பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீரஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளன. இதில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் முழுமையான விமர்சனத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
24
தி கேர்ள் பிரெண்ட் படத்தின் கதை
கல்லூரி மாணவி பூமி (ராஷ்மிகா), விக்ரம் (தீக்ஷித்) என்பவரைக் காதலிக்கிறார். ஆனால் விக்ரமின் ஆதிக்க குணத்தால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுகிறது. இதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை. பெண்களின் சுதந்திரத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் ஆணுக்கு சேவை செய்பவர் மட்டுமல்ல, அவளுக்கென ஒரு சொந்த வாழ்க்கை இருக்கிறது, அதை ஆண் மதிக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்லும் படம் தான் இந்த கேர்ள் பிரெண்ட்.
34
தி கேர்ள் பிரெண்ட் ப்ளஸ் மற்றும் மைனஸ்
முதல் பாதி காதல், காமெடியுடன் நகர, இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்கள் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன. ராஷ்மிகா, தீக்ஷித் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பிளஸ். மெதுவாக நகரும் திரைக்கதை மற்றும் யூகிக்கக்கூடிய சில காட்சிகள் மைனஸாக அமைந்துள்ளது. பூமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா வாழ்ந்துள்ளார். தீக்ஷித் ஷெட்டியும் சிறப்பாக நடித்துள்ளார். இருவரின் கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலம். ராவ் ரமேஷ் நடிப்பும் சிறப்பு.
ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை படத்திற்கு பெரும் பலம். பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்ததால், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பு. எடிடிங் விஷயத்தில் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். பெண்கள் பார்க்க வேண்டிய, ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களுடன் கூடிய முக்கியமான படம் இது. முதல் படம் என்று தெரியாத அளவிற்கு, ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனர் போல் இப்படத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ராகுல் ரவீந்திரன்.