நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகி இருக்கும் ஃபேண்டஸி கலந்த ரொமாண்டிக் திரைப்படமான கிஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனை போல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி வருபவர் கவின். இவர் நடித்த டாடா, லிஃப்ட் போன்ற படங்கள் ஹிட்டான நிலையில், கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார் கவின். ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஸ்டார் மற்றும் பிளெடி பெக்கர் படங்கள் சொதப்பியதால், கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கவின். அவர் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள திரைப்படம் கிஸ். இப்படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் சதீஷ்.
24
கிஸ் திரைப்படம்
கிஸ் திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், சக்தி, ஆர்.ஜே.விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஃபேண்டஸி உடன் கூடிய காதல் திரைப்படமாக கிஸ் உருவாகி இருக்கிறது. இப்படம் செப்டம்பர் 19-ந் தேதியான இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
34
கிஸ் ட்விட்டர் விமர்சனம்
கிஸ் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், சரியான டைட்டில், நேர்த்தியான நடிப்பால் கவின் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். ப்ரீத்தி, விடிவி கணேஷ், ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடிப்பு அருமை. பின்னணி இசையும் நன்றாக உள்ளது. கதையில் ஃபேண்டஸி உள்ளதால் அது ஏடிஎம் படத்தை நினைவூட்டுகிறது. ஓப்பனிங் காட்சி, இண்டர்வெல்லில் வரும் டான்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் காட்சி சூப்பராக உள்ளது. இதுதவிர படத்தில் சில அழகிய தருணங்களும், காமெடி காட்சிகளும் இருக்கின்றன. மொத்தத்தில் கிஸ் - மிஸ் என பதிவிட்டுள்ளார்.
கவினின் கிஸ் படத்திற்கு வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். வெளிநாட்டில் படம் பார்த்த ஒரு எக்ஸ் தள விமர்சகர் போட்டுள்ள பதிவை பார்த்த பலரும், அவர் ஏற்கனவே டாடா படமே நல்லா இல்லைனு சொன்னவர். அவர் வேண்டுமென்றே நெகடிவ் ரிவ்யூ கொடுத்து வருவதாக சாடுகின்றனர். இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி கிஸ் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.