Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?

Published : Sep 05, 2026, 10:11 AM IST

Babita Singh Reporting: நிமிஷா சஜயன் நடித்துள்ள இந்தி கிரைம் த்ரில்லர் திரைப்படம் பபிதா சிங் ரிப்போர்டிங். பெண் போலீஸ் பபிதா, தனது நண்பன் கொலைக்கான உண்மையைத் தேடும் பயணமே படத்தின் மையக்கதை. படத்தின் விமர்சனம் மற்றும் வரவேற்பு குறித்து பார்க்கலாம்.

PREV
14
பபிதா சிங் ரிப்போர்டிங்

சாதாரண போலீஸ் அதிகாரி..எதிர்பாராத ஒரு கொலை.. அதைத் தொடர்ந்து வெளிவரும் பல மர்மங்கள். அதிலும், தான் நம்பிய குடும்ப உறவுகளுக்குள்ளேயே இருக்கும் பொய்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கினால்? இப்படியான பரபரப்பான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தி கிரைம் த்ரில்லர் திரைப்படம் பபிதா சிங் ரிப்போர்டிங் ( ASI Babita Singh Reporting).

தற்போது இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ( Amazon Prime Video-) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

24
கதை விமர்சனம்

அம்பிகா பண்டிட் இயக்கியுள்ள இப்படத்தில் Nimisha Sajayan பபிதா சிங் என்கிற ‘Baby’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை பணியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் போலீஸ் பணியில் சேர்ந்தவர் பபிதா. பெரிய ஹீரோயிசம் இல்லாமல், தயக்கம், பயம், தன்னம்பிக்கை குறைவு என மிகவும் இயல்பான பெண் போலீஸ் அதிகாரியாக அவர் காட்டப்படுகிறார்.

34
பபிதா சிங் விசாரணை

குடும்ப நிகழ்ச்சிக்கு விடுமுறை கிடைக்காததால், செய்யாத தவறை ஏற்றுக்கொண்டு பணியில் சஸ்பெண்ட் செய்யப்படும் பபிதா, கணவர் ஷரத் (அன்ஷுமான் புஷ்கர்) உடன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு சிறுவயது நண்பரும் சிலை வடிவமைப்பாளருமான பன்சி (பருண் சோப்தி- Barun Sobti) மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். முதலில் நண்பனின் மரணம் என்ற கோணத்தில் பார்க்கும் பபிதா, பின்னர் அதில் ஏதோ மறைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது அவரது தனிப்பட்ட விசாரணை.

இங்குதான் படத்தின் ட்விஸ்ட் தொடங்குகிறது. பன்சியின் மரணத்தைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான மனைவி, குடும்ப உறுப்பினர்கள், பழைய உறவுகள் என ஒவ்வொருவரின் பின்னணியும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கார் முதல் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வரை சிறிய தடயங்கள் பபிதாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதே நேரத்தில், வீட்டில் கணவர் ஷரத் மற்றும் மாமியார் தரப்பில் இருக்கும் அழுத்தங்களும் பபிதாவின் வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன.

44
மர்மத்தின் பின்னால் இருப்பது யார்?

நடிகர் ராஜேஷ் குமார் SI சேத்தியாகவும், கீதிகா வித்யா ஓல்யான் கரம்ஜீத்தாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். குறிப்பாக பருண் சோப்தியின் பன்சி கதாபாத்திரத்திற்கு குறைந்த திரை நேரமே இருந்தாலும், அவரது நடிப்பு கவனம் ஈர்ப்பதாக விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

மொத்தத்தில், ‘Babita Singh Reporting’ ஒரு கொலை விசாரணையை மட்டும் மையமாகக் கொண்ட கதை அல்ல. பபிதா ஒவ்வொரு தடயத்தையும் பின்தொடரும்போது, அவள் சந்திக்கும் மனிதர்களின் உண்மையான முகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகின்றன. யாரை நம்புவது, யார் உண்மையை மறைக்கிறார்கள், இந்த மர்மத்தின் பின்னால் இருப்பது யார் என்ற கேள்விகள் படம் முழுவதும் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக இறுதிக்கட்டத்தில் விசாரணை செல்லும் திசை, இதுவரை நாம் நினைத்திருந்த விஷயங்களையே மாற்றும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அந்த மர்மத்தின் உண்மையான முடிச்சு என்ன? பபிதா கண்டுபிடிக்கும் உண்மை என்ன? அதைத் தெரிந்துகொள்ள Babita Singh Reporting படத்தை பாருங்கள். இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories