தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். மு.க.ஸ்டாலின் தொகுதியில் மட்டும் ஒருட்ச்ம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினோ, திமுகவினரோ யாருமே வாய் திறக்கவில்லை என குற்றம் சுமத்துகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்‘‘இன்னைக்கு ஒரு கோடி பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுள்ளார்கள். ஸ்டாலின் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர். அது தப்பா? ரைட்டா ? அது சரி என்றால் இவ்வளவு நாள் அவர்களை எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள்? உங்க சிஸ்டம் எப்படி அனுமதித்தது? முதலமைச்சர் தொகுதியில் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அது குறித்து முதலமைச்சர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? துணை முதலமைச்சர் தொகுதியில் 89 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். அது குறித்து உதயநிதி என்ன கருத்து தெரிவிக்கிறார்? ஒன்னு சரின்னு சொல்லுங்க? இல்ல தப்புன்னு சொல்லுங்க? தமிழ்நாட்டோட இரண்டு முக்கியமான தொகுதிகள். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தொகுதிகள்.