கொங்கில் டான் செந்தில் பாலாஜியா..? எஸ்.பி.வேலுமணியா..? 30 தொகுதிகளில் முரட்டு மோதல்..!

Published : Mar 05, 2026, 08:41 PM IST

கோவை தெற்கு திமுக சார்பில் 300 சாம்பிள் எடுக்கப்பட்ட பல இடங்களில் முதல் இடத்தில் அல்லது மிகக் குறைந்த வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் விஜய் வந்திருக்கிறார்.

PREV
15
கொங்கு மண்டத்தில் ஷாக்

தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறுவதில் திமுக செந்தில் பாலாஜி, எஸ்.பி. வேலுமணி இடையே அரசியல் வாரே அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கொங்கு மண்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் இரு தரப்புக்குமே ஷாக் கொடுத்துள்ளது.

இதனால், திமுகவும், அதிமுகவும் வெறித்தனத்தனமாக களத்தில் இறங்கி கபடியாடுவது கொங்கு மண்டல அரசியலில் உஷ்ணத்தை கூட்டியுள்ளது. திமுக கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி வசமும், அதிமுக மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணி வசமும் தலா 30 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு முக்கிய மாவட்டங்களில் அதிக தொகுதிகளை வெல்வது யார்? என்பதில் இருவருக்குள்ளும் விறுவிறுப்பான ரேஸ் நடைபெற்று வருகிறது.

25
அப்செட்டில் அதிமுக- திமுக

இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களில் திமுக தரப்பில் இதுவரை ஸ்பெஷல் டீம், உளவுத்துறையின் அலசல், திமுகவின் தலைமை நடத்தும் நிறுவனத்தின் சர்வே என மூன்று சர்வேக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் அதிமுகவிலும் இப்பகுதியில் எஸ்.பி. வேலுமணி நடத்திய சர்வே, ஒட்டுமொத்த தமிழகத்தில் எடப்பாடி டீம் சர்வே என இரண்டு சர்வேக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சர்வேக்களின் முடிவுகள் இரண்டு தரப்புக்குமே உற்சாகத்தையோ, பெரிய நம்பிக்கையையோ தரவில்லை.

ஐந்து ஆண்டுகளாக நிதி சலுகைகள், நலத்திட்ட உதவிகள் என எதுவும் திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பெரிய எழுச்சியை தரவில்லை. அதே வேளையில் அதிமுகவுக்கு கொங்கில் பழைய செல்வாக்கு இல்லை என இந்த சர்வே முடிவுகள் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. இதை தொடர்ந்து வெற்றிக்காக இரு தரப்புகளும் இறங்கி வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

35
போட்டி போட்டு சப்ளை

எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி இருவருமே நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை என்றால் சறுக்கல் தான் என புரிந்து வைத்திருக்கிறார்கள். பூத் கமிட்டிக்கு கணிசமான பணப்பட்டுவாடா, ஒன்றிய, நகர சார்பாக நிர்வாகிகளுக்கு கவனிப்புகள், மாவட்ட செயலாளர்களுக்கு வாரியங்கள் பதவி என்பது போன்ற வாக்குறுதிகளை இருதரப்பிலும் அள்ளிவிட்டு க் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக தன் கட்சிக்கு வாக்குகள் பெறுவதைவிட எதிர் தரப்புக்கு ஓட்டுப் போகாமல் தடுக்கும் நிர்வாகிகளுக்கு மிக அதிகமான கவனிப்புகள் உறுதி என்று வாய்மொழி உறுதியை கொடுத்திருக்கிறார்கள்.

அதிமுக சார்பில் கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் பெரிய தட்டில் வேட்டி, சேலை, ஷர்ட் துணி இவற்றுடன் பெரிய சைஸ் குடை ஒன்று வைக்கப்பட்டு அன்பளிப்பு தொகுப்பு பட்டுவாடா ஆகிறது. இதற்கு பதிலடியாக திமுகவும் சிறிய சைஸ் அண்டா, கரூர் புகழ் வெள்ளி கொலுசு என்று வரிசை கட்டுகின்றன. அன்பளிப்பு கொடுக்கிறோம் என்று மிக தைரியமாக பெயரைப் போட்டு இருதரப்பிலும் பொருட்களை விநியோகிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தடுக்காமல் இருதரப்பும் போட்டி போட்டுக் கொண்டு சப்ளை செய்வதுதான் இதில் விசேஷமே.

45
ஓட்டை போடும் விஜய்

இரண்டு பெரிய கட்சிகளின் ஆறு சர்வேக்களின் முடிவுகளும் ஒரு விஷயத்தை மட்டுமே சொல்லி உள்ளன. அது இப்பகுதியில் தவெகவின் வளர்ச்சி. குறிப்பாக கோவை தெற்கு திமுக சார்பில் 300 சாம்பிள் எடுக்கப்பட்ட பல இடங்களில் முதல் இடத்தில் அல்லது மிகக் குறைந்த வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் விஜய் வந்திருக்கிறார். இத்தனைக்கும் இத்தொகுதியில் இஸ்லாமிய வாக்கு வங்கியும் பலமாக உள்ளது. இந்த ரிசல்ட் ரிப்போர்ட் அதிமுகவைவிடம், திமுகவை தான் அதிகம் பாதித்துள்ளது.

எனவே இதை பிரேக் செய்துவிட துடிக்கிறார் செந்தில் பாலாஜி. முதற்கட்டமாக இளம் வாக்காளர்கள் இருக்கும் வீடுகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் சப்ளை செய்கிறது ஆளுங்கட்சி. இதற்கிடையே இரு தரப்பினரும் பரஸ்பரம் எதிர் தரப்புக்கு ஆப்பு வைக்கவும் தவறுவதே இல்லை. சமீபத்தில் கரூரில் நடந்த தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி., ''கோயமுத்தூர் காரர்கள் அவங்க ஊரை கெடுக்க மாட்டாங்க. ஆனால் பக்கத்து ஊரை..'' என்று போகிற போக்கில் கலப்கலப்பாக பேசிவிட்டார்.

55
வீடுகளுக்கே நேரடி விசிட்

இந்த வீடியோவை பல வடிவங்களாய் பிரித்து சோசியல் மீடியாவில் ஏற்றி கிழித்து வருகிறது அதிமுக, பாஜக கூட்டணி. இதற்கு பதிலடியாக கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல், அண்ணாமலையின் காஸ்ட்லி பிசினஸ் என்று அதிரடி வீடியோக்களை போட்டு தாக்குகிறது திமுக. இதற்கெல்லாம் நடுவில் இரு தரப்புகளும் பிரச்சாரத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை.

 ஏற்கனவே மகளிர் அணியின் மாநாடு, திருப்பூர், பல்லடம் வருகை முடிந்துவிட்ட நிலையில் இப்போது கோவை கருமத்தம்பட்டி அருகே இளைஞர் அணி மாநாட்டை நடத்தி முடித்துள்ளது திமுக. கட்சியின் ஒவ்வொரு அணியையும் எழுச்சியாக வைத்துக்கொள்ள செந்தில் பாலாஜி போடும் கணக்கு, இது தவிர ஒட்டுமொத்தமாக கழகத்தை உத்வேகப்படுத்தும் வகையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள், தொகுதி பொறுப்பாளர்கள், செயல்வீரர் கூட்டங்கள் பெரும் நிர்வாகிகளின் வீடுகளுக்கே நேரடி விசிட் என்று வேலுமணி பரபரக்கிறார்.

click me!

Recommended Stories