திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?

Published : Aug 17, 2026, 03:33 PM IST

திமுகவை கடுமையாக எதிர்த்து ஆட்சிக்கு வந்த தவெக அரசின் முதல்வர் திமுக-விடம் மன்னிப்பு கேட்கும் சூழல் ஏன் உருவானது? அப்படி என்ன நடந்தது? வாங்க விவரமாக பார்ப்போம்.

PREV
14
சட்டப்பேரவையில் தொடங்கிய விவாதம்

நான்கு நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று (17-08-2026) மீண்டும் கூடியது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், வருவாய்த்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது அவர் தவெக அரசை கடுமையாக விமர்சித்ததுடன். திமுகவின் நீண்ட அரசியல் வரலாற்றையும், சாதனைகளையும் பட்டிலிட்டு, கலைஞர் கருணாநிதியின் கொள்கைப் பிடிப்பை விதந்தோதினார்.

இதன் தொடர்ச்சியாக அவர் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களையும், தவெக தேர்தல் வாக்குறுதிகளையும் ஒப்பிட்டு பேசினார்.

குறுக்கிட்ட தவெக அமைச்சர் ரஞ்சித் குமார்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் குறுக்கிட்டார். அப்போது விவாதம் வேறு திசைக்கு மாறியது. குறிப்பாக தேர்தலில் பணம் கொடுப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ரஞ்சித் குமார், “திருமங்கலம் ஃபார்முலா” முதல் 2026-ல் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை என்ற வகையில் திமுகவை நோக்கி விமர்சனம் செய்தார். அதே நேரம், 2026 தேர்தலில் ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூட பணம் கொடுக்காமல் தவெக ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : Ayana Sayana Raja Yoga : இடம் மாறினால் கோடீஸ்வரர் ஆகும் ராசிகள்! அயன-சயன ராஜயோகம் செய்யும் மேஜிக்!

24
கருணாநிதி பெயரை குறிப்பிட்ட ரஞ்சித் குமார்

தேர்தல் பணம் தொடர்பான விவாதத்தில் ரஞ்சித் குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது திமுக உறுப்பினர்களை கொந்தளிக்கச் செய்தது.

ஏனென்றால், சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை குறிப்பிட்ட மரியாதையான முறையில் அழைப்பது தொடர்பான நடைமுறை இருந்து வருகிறது என்று திமுக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்

விவகாரம் இதோடு முடிந்துவிடவில்லை. கருணாநிதியின் பெயரை அமைச்சர் ரஞ்சித் குமார் குறிப்பிட்டபோது, சபாநாயகர் குறுக்கிட்டு அவரது பேச்சை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அமைச்சர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரது அந்தப் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

அதன்பிறகும் அமைச்சர் ரஞ்சித் குமார் எழுந்து பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அவரை அமருமாறு கூறியதுடன், அவருக்கு மைக் கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.

இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : Ginger Garlic Paste : இஞ்சி-பூண்டு பேஸ்ட் மாதக்கணக்கில் ஃப்ரெஷ்ஷா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

34
திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் கண்டனம்

இந்த சம்பவத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சட்டப்பேரவையில் குறிப்பிடும்போது, “மாண்புமிகு முதலமைச்சர்”, “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்”, “மாண்புமிகு உறுப்பினர்”, “முன்னாள் முதலமைச்சர்” போன்ற மரியாதையான அழைப்புமுறைகள் பயன்படுத்தப்படுவது அவையின் நடைமுறை என்று அவர்கள் கூறினர்.

அப்படியிருக்கும்போது, ஒரு அமைச்சர் முன்னாள் முதலமைச்சரின் பெயரை நேரடியாக குறிப்பிட்டது சரியா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க : Chidambara Rahasyam : சிதம்பர ரகசியம் என்றால் என்ன? அதன் நிஜமான அர்த்தம் இதுதான்!

44
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்!

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் விஜய் பின்னர் விதி 110-ன் கீழ் அரசின் அறிவிப்புகளை வெளியிட எழுந்தார். அப்போது அவர் திமுக உறுப்பினர்களை நோக்கி பேசியது தான் இன்றைய சம்பவத்தின் முக்கியமான தருணமாக மாறியது.

“உங்கள் கட்சித் தலைவரின் பெயரை குறிப்பிட்டது தவறுதான். அமைச்சர் சார்பில் நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்” என்று விஜய் தெரிவித்தார். விஜய் தனது அமைச்சரின் பேச்சை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. மாறாக, அந்தப் பேச்சு தவறு என்று வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, அமைச்சர் சார்பாக தானே மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

விஜய் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் சர்ச்சை அடுத்த கட்ட மோதலாக செல்லாமல் முடிவுக்கு வந்தது.

கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கலாம். ஆட்சியை விமர்சிக்கலாம். தேர்தல் முறையை விமர்சிக்கலாம். ஆனால் சட்டப்பேரவையின் மரபுகளையும், முன்னாள் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையும் காப்பாற்ற வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. முதல்வர் விஜய் அதை நன்றாக உணர்ந்து முதிர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : Milk : பாலை திரும்பத் திரும்ப கொதிக்க வைக்கிறீங்களா? இந்த விஷயம் தெரிஞ்சுக்கோங்க!

Read more Photos on
click me!

Recommended Stories